சென்னை, மார்ச் 30- தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறு வனத்தின் தயாரிப்புகளான பால் மற்றும் பால் பொருட் கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப் படுகின்றன. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய் யப்படும் பால் பாக்கெட் பால் உள்ளிட்ட பொருட் களை ஆவின் விற்பனை செய்கிறது.
பால், தயிர், மோர், பனீர், பாலாடைக்கட்டி, அய்ஸ்கிரீம், இனிப்புகள், குல்ஃபி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆவின் நிறுவனம் தயார் செய்து விற்பனை செய்கிறது. ஆவின் நிறுவனத்தின் தொழிலை மேலும் மேம்படுத்துவ தற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக அண்மையில் பிரீ மியம் பால் கேக், பாயாசம் மிக்ஸ், பால் புரோட்டீன் நூடுல்ஸ், டெய்ரி வொய்ட்னர், யோகர்ட் ஆகிய அய்ந்து புதிய பொருட்களை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திவைத்தார். இதுபோக ஆவின் வியா பாரத்தை விரிவுபடுத்த அரசு பல்வேறு முயற் சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சிங்கப் பூருக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆவின் பொருட்கள் தயார் செய் யப்பட்டு வருகிறது. சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வதற்காக உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தி அடைத்துவைக்கப்படும் ஆவின் பால் காணொலி மற்றும் ஒளிப் படங்களை ஆவின் நிறுவனம் சுட்டுரையில் வெளியிட்டுள்ளது.
இதன்படி, உயர் வெப்பத்தில் பதப்படுத்தப்பட்ட பால் இயந்தி ரங்கள் மூலம் அடைத்து வைக்கப் படுகிறது. இது முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் மூலம் நடைபெறுவதாக தெரிகிறது. இந்த காணொலி சமூக வலை தளங்களில் அதிகளவில் பகிரப் பட்டு வருகிறது.

No comments:
Post a Comment