வடலூர், மார்ச் 30- வடலூரை ஒட்டியுள்ள மருவாய் கிராமத் தில் பழைய பள்ளி அருகில் 26.3.2022 சனி இரவு 7 மணி முதல் 8 30 மணி வரை மாணவர் கள் இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் மத்தியில் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் அருமை பெரு மைகளும் கொள்கைகளும் போராட்டங்களும் நடை முறைகளும் விளக்கக்கூடிய வகையில் தோழர் தமிழ் வாணன் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வுக்கு ஒருங் கிணைப்பு மண்டல மகளிரணி செயலாளர் ரமாபிரபா, ஜோசப், வடலூர் நகர கழக தலைவர் புலவர் ராவணன், நகர செயலாளர் கோடையிடி குணசேகரன், ஒன்றிய அமைப் பாளர் சேகர், கிளைக் கழக தலைவர் திருநாவுக்கரசு, வல் லவன் ஆகியோர் பேசியபின் புதிய வரவுகள் பிரசாந்த் கார்த் திக் பாஸ்கர் நேருஜி ஆகியோர் பேசினர் இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒப்பிட்டும் ஜாதி ஒழிப்புக்கு தந்தை பெரியார் ஆற்றிய பங்கு பணி கள் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி தலைமையில் கழகத் தோழர்கள் நடத்திவரும் போராட்டங்கள் பற்றியும் பெரியாரியல் சிறப்புகள் பற்றி யும் விளக்கிப் பேசினார் ஏப்ரல் பத்தாம் நாள் கடலூரில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் பங்கேற்கும் கூட்டத்தில் புதிய தோழர்களை அறிமுகம் செய்வது என்றும் முடிவுகள் நிறைவேற் றப்பட்டது. மதவெறியை மாய்த்து மனித நேயம் காக்கும் பெரியாரின் பணி முடிக்க இளைஞர்கள் திராவிடர் கழ கத்தில் இணைய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment