வடலூர் நகராட்சி வளர்ச்சி மற்றும் வள்ளலார் பன்னாட்டு நிலையம் பற்றிய கருத்து கேட்புக் கூட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

வடலூர் நகராட்சி வளர்ச்சி மற்றும் வள்ளலார் பன்னாட்டு நிலையம் பற்றிய கருத்து கேட்புக் கூட்டம்!

வடலூர், மார்ச் 30- வடலூர் நக ராட்சி வளர்ச்சி பற்றியும் வட லூரில் அமைய உள்ள வள்ள லார் பன்னாட்டு நிலையம் குறித்தும் கருத்து கேட்பு கூட்டம் 26.3. 2022 சனி காலை 11 மணி அளவில் வடலூர் மங்கையர்கரசி திருமண கூட் டத்தில் மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன் னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட் சித்தலைவர் மாவட்ட காவல் அதிகாரி மாவட்ட வருவாய் அலுவலர் இந்து சமய அற நிலையத்துறை அலுவலர் வள் ளலார் தெய்வ நிலைய நிர்வாக அலுவலர் நகராட்சி அலுவலர் மற்றும் பல அலுவலர்கள் பங் கேற்றனர். நகரின் அனைத்து தரப்பு முன்னணி நிர்வாகிகளும் பங்கேற்று தங்கள் கருத்து களை தெரிவித்தனர். திராவிடர் கழக சார்பில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், வடலூர் நகர தலைவர் புலவர் ராவணன், மேனாள் ஒன்றிய தலைவர் இந்திரஜித், நகர அமைப் பாளர் முருகன் ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் பேசும்போது வள்ளலார் ஞான சபை வளாகம் சுத்தம் சுகாதாரம் பேணுதல் குறித்தும் ஆதரவற்றோர் பராமரிப்பு பற் றியும், சத்திய தருமச்சாலையில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், நகராட்சியின் நான்கே சாலைகளிலும் நகராட்சி எல்லை வரை சாலையின் குறுக்கே தடுப்பணை கட்டி மின் விளக்குகளை பொருத் துவது குறித்தும் மின்மயானம் குறித்தும் கட்டி முடிக்கப்பட்டு உள்ள அரசு நூலகம் உள்கட்ட மைப்பு குறித்தும் கழிவுநீர் பாதை அமைப்பு குறித்தும் விளக்கிப் பேசினார் அமைச்சர் அவர்கள் பொறுப்பான செயல்பாடு உரை வழங்கினார். ஊரன் அடிகள் வர்த்தகர் சங்க கலைச்செல்வன், ஞானசேகரன், அரிமா சங்கம் சந்திரகாசன், ஆசிரியர் சபேசன், மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரி யர் திருமுருகன் மற்றும் பலர் பங்கேற்று தங்கள் கருத்துக் களை இக்கூட்டத்தில் பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment