வேலூர், மார்ச் 30- குடியாத்தம் புவ னேகவரிப் பேட்டை பெரியார் அரங்கில் 26.03.2022 சனிக் கிழமை இரவு 8.00 மணி அள வில் வேலூர் மாவட்ட கலந் துரையாடல் கூட்டம் நடை பெற்றது. இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக் குமார் தலைமை தாங்கினார். வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன், மாநில மகளி ரணி அமைப்பாளர் ந.தேன் மொழி, வேலூர் மாநகர திரா விடர் கழக தலைவர் உவிஸ்வ நாதன், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலா ளர் மா.அழகிரிதாசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். நீட் எதிர்ப்பு. புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு. மாநில உரிமை மீட்பு வலியுறுத்தி பரப்புரை பயணம் மேற் கொண்டு நாகர்கோயில் தொடங்கி 22.04.2022 அன்று வேலூர் மாநகருக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் சிறப்புரையாற்றும் நிகழ்ச்சியினை எவ்வாறு எழுச் சியோடு நடத்த வேண்டும் என்பதை விளக்கி மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்க உரையும். மாநில அமைப்புச் செலயலாளர் ஊமை.ஜெய ராமன் விளக்க உரை யும் ஆற்றினார்கள்.
வேலூரில் நடைபெறும் பரப்புரை பெரும் பயண கூட்டத்தில் ஒத்த கருத்துடைய பெருமக்களை பங்கேற்கக் செய்வதெனவும். சுவரெழுத்து, உள்ளிட்ட பிரச்சாரப் பரப்பு ரையை சிறப்பாக செய்வதென இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரியார் மருத்துவரணி செயலாளர் பழ.ஜெகன்பாபு குடும்பத்தீன் சார்பில் 20,000, வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன் குடும்பம் சார் பில் 10,000. மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் இரா.அன் பரசன் கும்பத்தின் சார்பில் உணவு ஏற்பாடும். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலா ளர் மா.அழகிரிதாசன் சுவ ரொட்டி விளம்பரம், குடி யாத்தம் நகர தலைவர் சி.சாந்தகுமார் 5,000, குடியாத்தம் நகர அமைப்பாளர் வி.மோகன் 5,000, வேலூர் மாநகர தலைவர் உவிஸ்வநாதன் 1,000, குடியாத் தம் மாணவர் கழக இர.க. இனியன் 1000, வேலூர் மாநகர பகுத்தறிவாளர் கழக செயலா ளர் ஆ.மொ.வீரமணி 500 ஆகி யோர் நன்கொடை அறிவித்து கருத்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கசிகாமணி. வேலூர் மாநகர திராவிடர் கழகம் நெ.கி.சுப்பிரமணி, வேலூர் மாவட்ட மகளிர் பசறை தலை வர் சி.லதா, குடியாத்தம் மகளிர் பாசறை செயலாளர் இரா.இராஜகுமாரி, மகளிரணி பெ.இந்திராகாந்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் போ.தயாளன், தஞ்சை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, தஞ்சை மண்டல மாண வர் கழக செயலாளர் க.சற்கு ணன், குடியாத்தம் மாணவர் கழக வி.சி.சங்கநிதி ஆகி யோர் கலந்து கொண்டனர். இறுதி யில் குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தகுமார் நன்றி. கூறினார்.

No comments:
Post a Comment