சென்னை, மார்ச் 28- தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துபாயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதலமைச்சர் துபாய் பய ணத்துக்கு விமானம் கிடைக்கா ததால், தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த தனி விமானத்துக்கான செலவை திமுக-தான் ஏற்றுள்ளது. தமிழ் நாடு அரசின் நிதி செலவழிக் கப்படவில்லை. முதலமைச்சர் குடும்பச் சுற்றுலா மேற்கொண் டிருப்பதாக பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்ச ரின் இந்தப் பயணம் முதலீடு களை ஈர்ப்பதற்காக மட்டும் இல்லை. கடைக்கோடி தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வந்து உழைக்கும் ஒவ்வொரு குடும்பத்தினுடைய வளத்துக்கா கவும்தான்.
உலக வர்த்தகப் பொருட் காட்சி முடியும்போதுதான் மிகப் பெரிய கூட்டம் வந் திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் உலகின் பல பகுதியிலிருந்தும் ஏராளமானோர் வந்துள்ளனர். இந்த நேரத்தில் அரங்கைத் திறப்பதுதான் சரியாக இருக்கும் என்பதை முதலமைச்சர் உணர்ந்து தான் இந்தப் பயணத்தை மேற் கொண்டு உள்ளார். பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட வெளி நாட்டுப் பயணங்களினால் எத் தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது. ஆனால், தற்போது இந்த 3 நாட்களில் துபாய், அபு தாபி பயணங்களில் ஏறத்தாழ ரூ.6,200 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்து வெற்றிகரமான பய ணத்தை முதலமைச்சர் மேற் கொண்டுள்ளார்.
விருதுநகர் பாலியல் வழக்கு குறித்து முதலமைச்சர் சட்டப் பேரவையில் தெளிவாக விளக்க மளித்து உள்ளார். இந்த வழக் கில் சிபிசிஅய்டி தனி அதிகா ரியை நியமித்து முழுமையாக முடிப்பதற்கும், இதில் சம்பந் தப்பட்ட குற்றவாளிகளை நீதி மன்றத்தில் நிறுத்தி 60 நாட் களுக்குள்ளாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அதிகபட்ச தண் டனை பெற்றுத் தந்து, இந்தி யாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்கும் என்று முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, இவ்வழக்கு குறித்து பழனிசாமி தேவையில்லாத கருத்துக்களைக் கூறுகிறார். முதலமைச்சருக்குக் கிடைக்கும் புகழையும், வரவேற்பையும் பொறுத்துக்கொள்ள முடியா மல் இத்தகைய புழுதிகளை பழ னிசாமி இறைத்துக் கொண்டி ருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment