தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் லட்சியம்: முதலமைச்சர் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 28, 2022

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் லட்சியம்: முதலமைச்சர் அறிக்கை


(தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (27.3.2022) துபாயில் உள்ள Museum of the Future அருங்காட்சியத்தைப் பார்வையிட்டார்.)

துபாய், மார்ச் 28- தமிழ்நாட் டில் மட்டும் அல்ல, உல கம் முழுவதிலும் தமிழர் கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் லட்சியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறியுள்ளார். 

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எனது முதல் வெளிநாட்டு பயணம். இது, தமிழ்நாட் டின் முதலீட்டிற்கான பயணம். கடந்த 2 நாட் களாக பல்வேறு நிகழ்வு களில் பங்கேற்று, தமிழ் நாட்டிற்கான முதலீடுக ளுக்குரிய ஒப்பந்தங்கள் கைª யழுத்திடப்பட்ட தையும், துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீபா கோபுரத்தில் நம் செம்மொழியான தமிழ் வண்ண வண்ண விளக் குகளில் ஒளிர்ந்ததையும், தமிழ்நாட்டின் பெருமை  பாரம்பரியம் - அகழ்வாய் வுகள் காட்டும் தொன்மை ஆகியவற்றின் சிறப்புகள் உலகறிய வெளிப்பட்ட தையும், தமிழ்நாட்டு மக்கள் அறிந்திருப்பீர்கள்.

இந்த பயணத்தை பற்றி ஒரு சிலர் அரசிய லுக்காக பேசி தங்கள் இருப்பை காட்டிக் கொள்ள நினைத்தாலும், பொதுமக்களும் உண்மை நிலை அறிந்த மாற்றுக் கட்சியினரும்கூட மன தாரவும், மனதளவிலும் பாராட்டவே செய் கிறார்கள்.

ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு

தமிழ்நாட்டில் நமது அரசு அமைந்தபிறகு ரூ.2 ஆயிரம் கோடி முதலீட் டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ள டி.பி. வேர்ல்டு என்ற புகழ் பெற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதி காரி சுல்தான் அகமது பின் சுலைமானுடன் இரவு உணவு விருந்து நடை பெற்றது.

மறுநாள், மார்ச் 25ஆம் தேதி அன்று காலையில், அய்க்கிய அரபு அமீரகத் தின் ஒன்றிய பொருளா தார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரியை சந்திக்க வந்தேன். இந்த சந்திப்பின்போது, அய்க்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக் கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

புர்ஜ் கலீபா கோபுரம்

துபாய் எக்ஸ்போவில் இந்தியா பெவிலியனில், தமிழ்நாடு வாரத்தை யொட்டி, தமிழ்நாட்டுக் கான அரங்கு திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பதிவு ஸ்டுடியோ வுக்கு சென்று வந்தேன்.

எக்ஸ்போவை பார் வையிட்ட பிறகு, பேலஸ் டவுன்டவுன் என்கிற இடத்திற்கு சென்றோம். அங்குதான் உலகின் உயரமான புர்ஜ் கலீபா கோபுரம் அமைந்துள் ளது. தமிழின் பெருமை அங்கு காட் சிப்படுத்தப் படுவதை பார்ப்பதற்காக அமீரக தமிழ் மக்கள் பல ரும் திரளாக வந்திருந் தனர்.

முதலீட்டாளர் மாநாடு

மார்ச் 26-ஆம் தேதி காலையில் முதலீட்டா ளர் மாநாட்டில் பங்கேற் றேன். மாலையில் துபா யில் மிக முக்கியமான 4 தொழிலதிபர்களுட னான சந்திப்பு நடந்தது. அங்கும் பல முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் கையெ ழுத்திடப்பட் டன. அந்த நிகழ்வுக்குப் பிறகு, துபாயில் வாழும் தமிழ்ச் சொந்தங்களை சந்திப்பதற்காகப் புறப் பட்டேன்.

துபாய் சென்றதிலி ருந்து பன்னாட்டு நிகழ் வுகள் பலவற்றில் கலந்து கொள்ள வேண்டியிருந் ததால் கோட்-சூட் உடை அணிந்து சென்று வந் தேன். தமிழ்ச் சொந்தங் களை சந்திக்கும் நிகழ்வு என்றதுமே வழக்கம் போல வேட்டி-சட்டை அணிந்து சென்றேன்.

தி.மு.க.வின் லட்சியம்

தமிழர்கள் தமிழ்நாட் டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் லட்சி யம். நீங்கள் வாழும் நாட்டை முன்னேற்றுங் கள். அதே நேரத்தில், நாம் தமிழினத்தை சேர்ந் தவர்கள் என்பதை மறந்து விடாமல் வாழுங்கள். இந்த நாட்டின் வளத்தை யும், அறிவையும், தொழில் நுட்பத்தையும் தமிழ் நாட்டிற்கு அறிமுகம் செய்யுங்கள் என்று உரை யாற்றினேன்.

27.3.2022 அன்று மாலை அபுதாபிக்கு சாலைவழிப் பயணம். இன்று (28.3.2022) அபுதாபியில் உள்ள மன்னர் குடும்பத் தைச் சேர்ந்த முதலீட் டாளர்களுடனான சந் திப்பு நடக்கிறது. கேரளா வைச் சேர்ந்த லூலு குழு மத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் எம்.ஏ.யூசுப் அலி, தமிழ்நாட்டில் தனது நிறுவனத்தின் சார் பில் முதலீடுகளை செய்வ தில் ஆர்வமாக உள்ளார். அவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின்றன. அதனைத் தொடர்ந்து, அபுதாபி தமிழ்ச் சங்கத்தின் சார் பில் அங்குள்ள தமிழ்ச் சொந்தங்களை சந்தித்து மகிழ்கிறேன்.

அமீரக பயணம்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் தி.மு.க. அரசு முனைப்புடன் உள் ளது. அமீரக பயணம் அதற்கேற்ற வகையில் முழுமையான வெற்றியை தந்துள்ளது.

கடல் கடந்து சென் றேன். கை நிறைய புரிந் துணர்வு ஒப்பந்தங்களை யும் அதற்கேற்ற முதலீடு களையும் பெற்றேன். திரை கடலோடி திரவியம் தேடும் தமிழ் பண்பாட் டின் வழியே பயணித்து, மீண்டும் தாய்த்தமிழ்நாடு வருகிறேன். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

No comments:

Post a Comment