மோடியின் தேர்தல் கால சலுகை முடியப் போகிறது பெட்ரோல் டேங்கை நிரப்பிக்கொள்ளுங்கள் ராகுல் காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

மோடியின் தேர்தல் கால சலுகை முடியப் போகிறது பெட்ரோல் டேங்கை நிரப்பிக்கொள்ளுங்கள் ராகுல் காந்தி

புதுடில்லி, மார்ச் 6 உங்கள் பெட்ரோல் டேங்குகளை முழுமையாக நிரப்பிக்கொள்ளுங்கள். மோடி அரசின் தேர்தல் கால சலுகை விரைவில் முடியப்போகிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

உக்ரைன் போர் காரணமாக பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ஆனாலும் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் விலை உயரவில்லை. உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் காரணமாகவே இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலை உயரவில்லை எனவும், இந்த தேர்தல்கள் முடிந்தவுடன் மீண்டும் இந்த விலை உயரும் எனவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையில் 5 மாநில தேர்தல் நாளை (திங்கட்கிழமை) முடிவுக்கு வருகிறது. அதைத்தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை முன்வைத்து காங்கிரஸ் மேனாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கிண்டலுடன் கூடிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், உங்கள் பெட்ரோல் டேங்குகளை முழுமையாக நிரப்பிக் கொள்ளுங்கள். மோடி அரசின் தேர்தல் கால சலுகை விரைவில் முடியப்போகிறது என கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் சென்னையில்  மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு

சென்னை, மார்ச் 6 முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில், சென்னையில் வருகிற 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்குகிறது. 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், முதல்முறையாக வனத்துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-  முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில், வருகிற 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை உள்ள நாட்களில் சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். அரசு கடந்த 10 மாதங்களில் மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் விதமாக பல்வேறு புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இந்த வகையில், ஆளுநர் உரை, முதல்-அமைச்சரின் செய்தி வெளியீடு மற்றும் சட்டமன்ற பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கை, அமைச்சர்களால் மானிய கோரிக்கைகளின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என மொத்தம் 1,704 அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்பட்டு, அதில் 80 சதவீதத்திற்கும் மேலான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்புகளின் கீழ் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாட்டை, மாவட்ட ஆட்சியர்களின் மூலமாக அறிந்து கொள்வதற்காகவும், அவற்றை மேலும் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து உரிய அறிவுரைகளை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இதுவரை வனத்துறை அலுவலர்கள் முதல்-அமைச்சரின் ஆய்விலோ, மாநாட்டிலோ கலந்து கொண்டதில்லை. முதல் முறையாக வனத்துறை அலுவலர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வனத்துறை தொடர்பான திட்டங்களை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் ஆய்வு செய்ய இருக்கிறார்.

இந்த 3 நாட்கள் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு, மாவட்ட வளர்ச்சிப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விரிவான ஆய்வை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் மேற்கொள்வார். மேலும், வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக அறிந்து, அதன் அடிப்படையில் சிறப்பான திட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment