குழந்தைகளின் ஆபாசப்படக் காட்சிகளை முகநூலில் பதிவேற்றிய வக்கிரம் போக்சோ சட்டத்தின்கீழ் அர்ச்சகர் கைது - சிறையிலடைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

குழந்தைகளின் ஆபாசப்படக் காட்சிகளை முகநூலில் பதிவேற்றிய வக்கிரம் போக்சோ சட்டத்தின்கீழ் அர்ச்சகர் கைது - சிறையிலடைப்பு

உடுமலை, மார்ச் 6- திருப்பூர் மாவட்டம், மடத்துக் குளம் அருகே கணியூர் அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவருக்கு பாலாஜி என்ற இன்னொரு பெயரும் உண்டு. இவர் வெங்கிட்டாபுரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் அர்ச்சகராக வேலை பார்த்து வந்துள்ளார்.

பூஜை நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் முகநூலில்தான் இருப்பாராம். போலி கணக் கைக் கொண்டு சிறுமிகளின் ஆபாச  காட்சிப் பதிவுகளைத் தேடிப்பிடித்து பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து ழிசிவிணிசி சைபர் டிப்லைன் என்ற பாலியல் தொல்லைகளில் இருந்து குழந் தைகள் பாதுகாப்பு அமைப்பினர் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில், உடுமலை மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசா ரணையில், பாலாஜியின் அலைபேசி எண்ணைக் கொண்டு அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து காவல் துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment