முகநூலைத் தொடர்ந்து டுவிட்டருக்கும் ரசியாவில் தடை..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

முகநூலைத் தொடர்ந்து டுவிட்டருக்கும் ரசியாவில் தடை..!

மாஸ்கோ, மார்ச் 6 முகநூலைத் தொடர்ந்து டுவிட்டருக்கும் ரசி யாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது 10ஆவது நாளாக ரசியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரசிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், உக்ரைன் மீது ரசியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

உக்ரைன் தலைநகர் சிவ் நோக்கி வரும் ரசிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், ரசிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப் படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வந்தன.

இதற்கிடையில், உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு ராணுவ நடவடிக்கை (போர்) குறித்து பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உக்ரைன் மீதான ரசியாவின் தாக்குதலுக்கு கண்ட னம் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, உக்ரைன் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் ரசிய அரசு செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இதனால், ரசியா டுடே, ஸ்புட்னிக் போன்ற ரசிய அரசு ஊடகங்கள் அய்ரோப்பாவில் ஒளிபரப்பாவதை பேஸ்புக் நிறுவனம் தடுத்தது.

இதைத் தொடர்ந்து ரசியாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்தது. ரசிய அரசு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதால் ரசியாவில் பேஸ்புக்  செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அந் நாட்டு அரசு கூறியது.

இந்த நிலையில் தற்போது பேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்ட ருக்கும் ரசியாவில் தடை விதிக்கப் படுவதாக ரசிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment