சியோல், மார்ச் 6 தென் கொரியாவில் கரோனா தொற்று அதிகரிப்புக்கு மத்தியில் அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்கு பதிவு தொடங்கியது.
சீனாவில் இருந்து கரோனா பரவ தொடங்கியபோது முதலா வதாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தென்கொரியாவும் ஒன்று. 2020ஆம் ஆண்டின் ஜனவரி மாத பிற்பகுதியில் அங்கு வைரஸ் பரவ தொடங்கியது. அதே சமயம் கட்டாய முக கவசம், பொது இடங் களில் சமூக இடைவெளி போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடித்ததன் மூலமாக வைரஸ் பரவலை அந்த நாடு வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தது.
அதுமட்டும் இன்றி கரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பலவும் முக்கிய நிகழ்வுகளை ஒத்தி வைத்த நிலையில், தென்கொரியா 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில் தென்கொரியாவில் தற்போது கரோனா தொற்று உச்சத்தில் இருந்து வரும் நிலையில், திட்டமிட்டபடி அதிபர் தேர்தலை நடத்தி முடிக்க ஆயத்தமாகி வருகிறது அந்த நாட்டு அரசு.
அந்த வகையில் வருகிற 9ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் முன்கூட்டியே வாக்க ளிக்கும் நடைமுறை தொடங்கியது. இந்த வாக்கு பதிவு இன்றும் நடக்கிறது.
முன்கூட்டியே வாக்குப்பதிவுக் காக நாடு முழுவதும் 3,500-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கரோனா கட்டுப்பாட்டு விதி முறைகளை கடைப்பிடித்து வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடப்ப தாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே தென்கொரியாவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 838 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment