ரசியாவில் விற்பனை நிறுத்தம் - சாம்சங் அறிவிப்பு!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

ரசியாவில் விற்பனை நிறுத்தம் - சாம்சங் அறிவிப்பு!!

சியோல், மார்ச் 6 இன்டெல் கார்ப்பரேஷன், எச்.பி.நிறுவனம், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் வரிசையில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனமும் ரசியாவில் தங்கள் நிறுவன பொருட்கள் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் ரசியாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை ரசியாவில் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால், சாம்சங் நிறுவனத்தில் அலைபேசி, தொலைக்காட்சி உள்பட அனைத்து தயாரிப்புகளின் விற்பனையும் ரசியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.  மேலும், சாம்சங் நிறுவனத்தின் பிற சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

உலகளாவிய திறன்பேசி வருவாயில் சுமார் 4% ரசியாவில் திறன்பேசி விற்பனை மூலம் வருகின்றன.ரசியாவின் கலுகாவில் சாம்சங் தொலைக்காட்சி தயாரிப்பு ஆலையும் உள்ளது.

தற்போது நிலவும் போர் நடவடிக்கையால் ரசியாவிற்கு ஏற்றுமதி செயப்படும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்கள் எண்ணங்கள் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளது. எங்களின் அனைத்து ஊழியர்கள் மற்றும் அவ்ர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை. எங்கள் நிறுவனம்  பாதிக்கப்பட்டவர்களுக்கு $6 மில்லியன் நன்கொடை அளிக்கிறது என்று தெரிவித்தார்.

ரசியா மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் இருந்து தென் கொரியாவிற்கு அமெரிக்கா விலக்கு அளித்திருந்தாலும், ரசிய நாட்டிற்குள் கப்பல் வழிகள் மற்றும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் கொரிய நிறுவனங்களால் அப்பகுதிக்கு பொருட்களை அனுப்புவதை கடினமாக்கி உள்ளன. இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment