உக்ரைன் மீதான அதிபர் புதினின் போர் தாக்குதலால் போருக்கு முன் அனுபவித்த பயன்களை இழக்கும் ரசிய குடிமக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

உக்ரைன் மீதான அதிபர் புதினின் போர் தாக்குதலால் போருக்கு முன் அனுபவித்த பயன்களை இழக்கும் ரசிய குடிமக்கள்

மாஸ்கோ, மார்ச் 6- போரின் பொருளாதார விளைவுகள் ரசியாவை கடுமையாக பாதித்துள்ளன. ரசிய குடிமக்கள் போருக்கு முன் அனுபவித்து வந்த பயன்களை இப்போது இழக்க தொடங்கி உள்ளனர்.

உக்ரைன் மீது நடத்தப்படும் ரசியாவின் தாக்குதல் 10-ஆவது நாளை எட்டியுள்ளது.  உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் தொடர்ந்து ரசிய படைகள் குண்டு மழை பொழிந்து வருகிறது.

போரின் பொருளாதார விளைவுகள் ரசியாவை கடுமையாக தாக்கத் தொடங்கியுள்ளன. டாலருக்கு நிகரான ரசிய பணமான  ரூபிள் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது.

ரசிய வங்கிகள் மீதான பொருளா தாரத் தடைகளால் ரசிய நிதிச் சந்தைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இறக்குமதி விலை கிடுகிடுவென உயர்ந் துள்ளது.ரசிய சந்தையில் கடந்த வாரத்தில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங் களின் வெளியேற்றம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சாதாரண ரசிய குடிமக்கள் போருக்கு முன் அனுபவித்து வந்த பயன்களை இப்போது இழக்க தொடங்கி உள்ளனர்.

இணைய பரிவர்த்தனைக்கு தடை

நாடு முழுவதும் மில்லியன் கணக்கான ரசியர்கள் கூகுள் பே மற்றும் ஆப்பிள் பே பயன்படுத்துகின்றனர். அன்றாட தேவைகளுக்கு அவர்கள் தங்கள் திறன் பேசி வழியாக பயன்படுத்தும் இணைய வழி பரிவர்த்தனைகளை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. ரசிய மக்களுடைய விசா - மாஸ்டர் கார்டு போன்ற ஏடிஎம் கார்டுகள் செயலற்று போயின.

இதுகுறித்து ரசிய நபர் ஒருவர் கூறுகையில், நான் வழக்கமாக போன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்வேன். ஆனால் இப்போது அவற்றை உபயோகப் படுத்த முடியவில்லை.

கூகுள் பே, ஆப்பிள் பே போன்றவற்றை பயன்படுத்த இயல வில்லை என்றார்.

இந்நிலையில், கூகுள், பேஸ்புக் மற்றும் யூடியூப் உடன் இணைந்து ரசிய அரசு ஊடகங்கள் அதன் தளங்

களில் பணம் சம்பாதிப்பதைத் தடுக்க நட வடிக்கை எடுப்பதாக அறிவித்

துள்ளன.

டி எம்மில் நீண்ட வரிசை

போர் பதற்றம் தொடங்கியதிலிருந்தே டி எம் மய்யங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்தனர். ரசிய வங்கிகள் மீதான பொருளாதாரத் தடைகளால் ரசிய மக்களுடைய விசா மாஸ்டர் கார்டு போன்ற ஏடிஎம் கார்டுகள் செயலற்று போயின.

இதனை முன்கூட்டியே கணித்து அவர்கள் கிடைக்கும் பணத்தை கையில் எடுத்து கொள்ள முண்டியடித்தனர்.

ஆனால் நிர்ணயிக்கப்பட்ட அளவி லான தொகையை மட்டுமே ஒருவர் எடுத்து கொள்ள முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பணத்தேவைக்கு கூட சிரமப்பட்டு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் சிரமம்

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற ரசியவாசிகள் இப்போது உலக நாடுகள் ரசியாவிற்கு விமானம் இயக்க தடை செய்யப்பட்டுள்ளதால் திக்கற்ற நிலை யில்  உள்ளனர்.

சுமார் ஒன்றரை லட்சம் ரசிய நாட் டவர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்கள் தங்கள் தாயகம் திரும்ப வழியின்றி திண்டாடி வருகின்றனர்.

பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறின

இன்டெல் கார்ப்பரேஷன், எச் பி  நிறுவனம், ஆப்பிள் மற்றும் மைக் ரோசாப்ட் நிறுவனங்கள் வரிசையில் சாம்சங்  எலக்ட் ரானிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவன மும் ரசியாவில் தங்கள் நிறுவன பொருட்கள் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

விளையாட்டு உபகரணங்கள் இல்லை

பிரபல விளையாட்டு உபகர ணங்கள் தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ், நைக், பூமா போன்றவை ரசியாவுடனான தங்கள் உறவை துண்டித்துள்ளன. இதன் காரணமாக அந்நிறுவன பொருட்களை வாங்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

ஹாலிவுட் படங்கள் இல்லை

பிரபல சினிமா பட நிறுவனங்களான யூனிவர்சல் பிக்சர்ஸ், சோனி, பாரா மவுண்ட் பிக்சர்ஸ், வால்ட் டிஸ்னி கம்பெனி போன்ற ஹாலிவுட் நிறுவ னங்கள் ரசியாவில் தங்கள் சேவை களை தடை செய்துள்ளன.

இதனால் பல திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிளை அங்கு ஒளிபரப்பு செய்யப்படாது. பொதுமக்களும் குழந் தைகளும் தாங்கள் விரும்பும் படங்களை பார்க்க முடியாத சூழல் உள்ளது.

No comments:

Post a Comment