நாட்டை விட்டு நான் வெளியேறவில்லை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

நாட்டை விட்டு நான் வெளியேறவில்லை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

 கீவ், மார்ச் 6 தலைநகர் கீவில் இருப்பதாகவும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில்  ஒரு காட்சிப்பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், அவர் இன்னும் தலைநகர் கீவில் இருப்பதாகவும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும் கூறி உள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள பதிவில்இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நான் எங்காவது ஓடிவிட்டேன் - உக்ரைனில் இருந்து, கீவில் இருந்து, என் அலுவலகத்திலிருந்து ஓடிவிட்டேன் என்ற தகவல் வெளிவருகிறது. நான் இங்கே என் இடத்தில் இருக்கிறேன், ஆண்ட்ரி போரிசோவிச்சில் இருக்கிறேன். யாரும் எங்கும் தப்பி ஓடவில்லை. இங்கே, நாங்கள் வேலை செய்கிறோம்,” என்று ஜெலென்ஸ்கி கூறி உள்ளார். “எங்களுக்கு ஜாகிங் பிடிக்கும், ஆனால் இப்போது அதற்கு நேரமில்லை என்று அவர் நகைச்சுவையாக கூறினார்.

சீன பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி அதிகரிப்பு

பெய்ஜிங், மார்ச் 6  உலகிலேயே ராணுவத்துக்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2ஆவது இடத்தில் உள்ளது. 20 லட்சம் வீரர்களுடன் சீன ராணுவம் உலகின் பெரிய ராணுவமாக திகழ்கிறது.கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான ராணுவ மோதல் மற்றும் அமெரிக்காவுடன் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில் சீனா தனது ராணுவ நிதிநிலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

2021ஆம் ஆண்டுக்கான ராணுவ நிதிநிலையை 6.8 சதவீதத்துக்கு சீனா உயர்த்தி இருந்தது.  அந்நாட்டு நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட வரைவு நிதிநிலை அறிக்கையில் ராணுவத்துக்கு 209 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சத்து 26 ஆயிரத்து 504 கோடி) ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 6.8 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த 2022 ஆம் ஆண்டுக்கான சீனா நிதிநிலை அறிக்கையில் ராணுவத்துக்கான நிதி 7.1 சதவீதம் அதிகரித்து  உள்ளது. 230 பில்லியன் அமெரிக்க டாலர் (அதாவது இந்திய மதிப்பில் ரூ.17.57 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது). சீன நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி இந்தியாவில் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை விட 3 மடங்கு அதிகமானது.

No comments:

Post a Comment