முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி பயணம்

சென்னை, மார்ச் 30-  4 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.3.2022) டில்லி செல்கிறார். 

டில்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் ஏப்.2ஆம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டில்லி புறப்பட்டு செல்கிறார்.

டில்லியில் நாளை (31.3.2022) பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டில்லியில் ஏப்ரல் 2ஆம் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து, நாளை மாலை ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

ஏப்ரல் 1ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். ஏப்ரல் 2ஆம் தேதி திமுக அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

No comments:

Post a Comment