திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்-புத்தக வெளியீடு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்-புத்தக வெளியீடு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பங்கேற்பு

சென்னை, மார்ச் 30- 'திருக்குறளை தேசிய நூலாக்கவும் வேண்டும் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்' என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. அனைத்திந்திய தமிழ்ச் சங்க பேரவைத் தலைவர் இரா முகுந்தன் தலைமையேற்றார். பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், புலவர் சுந்தரராசன், பாவலர் கணபதி, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரி யர் முத்து, வா.மு.சே. திருவள்ளுவர், கவிஞர் இளமாறன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டார்கள். அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் இரா.முகுந்தன் பேசுகிற பொழுது திருக்குறளை தேசிய நூலாக வலியுறுத்தி டில்லியில் மாநாடு நடத்த அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்க பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வ தாகவும் உறுதி அளித்தார். அனைத்து தமிழ் சங்கங்களும் இணைந்து பாடுபட்டால் செம்மொழித் தகுதி தமிழுக்கு பெற்று தந்தது போல் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும். அதேபோல தேசிய மொழிகளில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment