புதுடில்லி, மார்ச் 7- போரின் காரணமாக உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவ, மாணவிகள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக உக்ரைன் தலைநகர் கீவில் செயல்படும் இந்திய தூதரகம் நேற்று (6.3.2022) சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், கார்கிவ் நகரில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் இணையத்தில் கூகுள் படிவத்தில் உட னடியாக பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பாக இருங்கள். மன உறுதியோடு இருங்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்திய மாணவரின் பெயர், மின்னஞ்சல், அலைபேசி எண், முகவரி, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) விவரங்கள், பாலினம், வயது ஆகிய விவரங்கள் கூகுள் படிவத்தில் கோரப்பட்டுள்ளன.
ஹங்கேரியில் செயல்படும் இந்திய தூதரகம் நேற்று (6.3.2022) வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ஆபரேஷன் கங்கா திட்டத்தின் இறுதி கட்ட மீட்புப் பணிகள் தொடங் கப்பட்டுள்ளன. தூதரகத்தின் சார்பில் தங்க வைக்கப் பட்டுள்ளோர், சொந்த ஏற்பாட்டில் தங்கியுள்ளோர் உடனடியாக புடாபெஸ்டில் உள்ள ஹங்கேரி சிட்டி சென்டருக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இதன்படி உக்ரைனில் இருந்து ஹங்கேரி சென்றடைந்த இந்திய மாணவ, மாணவியர்கள் நேற்று (6.3.2022) தூதரக அலுவலர்களை சந்தித்து தங்களது விவரங்களை பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment