"தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?", "இவர்தாம் அண்ணா", "இவர் தான் கலைஞர்" ஆகிய மூன்று நூல்களை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

"தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?", "இவர்தாம் அண்ணா", "இவர் தான் கலைஞர்" ஆகிய மூன்று நூல்களை

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அரங்க¤ல் பேரா. சுப.வீரபாண்டியன் வெளியிட்டார்

சென்னை, மார்ச் 7 சென்னை நந்தனத்தில் நடைபெற்ற 45-ஆம் சென்னைப் புத்தகக் காட்சியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகள்  3.3.2022 அன்று வெளியிடப்பட்டன. 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ''தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?'', ''இவர்தாம் அண்ணா'', ''இவர் தான் கலைஞர்'' ஆகிய மூன்று நூல்களையும்,  பெரியார் பிஞ்சு வெளியீடாக பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் எழுதி யுள்ள ''சொர்க் கத்துக்கு ஒரு சீட்டு'', ''நட்புன்னா என்ன தெரி யுமா?'' ஆகிய இரு நூல்களையும் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டார். 

எழுத்தாளர் விழியன் எழுதியுள்ள ''பம்பம் டோலேய்...'' நூலை குழந்தைகள் செயல்பாட்டாளர் எழுத்தாளர் வெற்றிச் செழியன் வெளியிட்டார். வெளியிடப் பட்ட புத்தகங்களை எழுத்தாளர் அ.முத்துக் கிருஷ்ணன், பத்திரி கையாளர் ராதிகா சுதாகர், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன், குழந் தைகள் செயற்பாட்டாளர் இனியன், திருப்பத்தூர் கே.சி. எழிலரசன், சைதை மு.ந.மதியழகன், மாணவர் நகலகம் சா.அ.சவுரிராசன், பொறியா ளர் எ.சிற்றரசு, ஆவடி முருகன், வஜ்ரவேலு, பெரியார் பிஞ்சு மகிழன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

நிகழ்வை திராவிட மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத் தார். பேரா. சுப.வீ. அவர்களின் வாழ்விணையர் வசந்தா, பெரியார் மாணாக்கன், உடுமலை வடிவேல், குழந்தைகள் செயற்பாட்டாளர் ஷாம் சுந்தர், பெரியார் புத்தக நிலையத் தோழர் கள் சக்திவேல், சாந்தகுமார், செந்தில், அர்ஜூன், அருண்குமார், பவானி, பகலவன், சீர்த்தி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment