திருச்சி, மார்ச் 7- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் 46ஆவது விளையாட்டு விழா அன்னை மணியம்மையார் விளையாட்டு அரங்கில் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. பள்ளி யின் தலைமையாசிரியை சுபாக் கியலெட்சுமி இவ்விழாவை தலைமையேற்றார்.
சிறப்பு விருந்தினராக உலக தடகள நிலைப்பயிற்சியாளர் அண்ணாவி கலந்து கொண்டு நான்கு இல்லங்களை சேர்ந்த மாணவியர்கள் மற்றும் NCC, NSS, Green crop, JRC, Scout ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, ஒலிம்பிக் சுடர் ஏற்றி அமைதியின் சின் னமான புறாவை பறக்கவிட்டு கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு பெரியார் கல்வி வளாகத்தின் அனைத்து முதல்வர்களும் கலந்து கொண்டு மாணவியர்க ளுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித் தனர். முதலாவதாக பள்ளியின் 12ஆம் வகுப்பை சேர்ந்த அ. ஆர்த்தி என்ற மாணவி விளை யாட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வர வேற்று உரைநிகழ்த்தினார். அடுத்ததாக மாணவியர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறுவிதமான உடற்பயிற்சிகளை செய்து காட்டி அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள். 6ஆம் வகுப்பு மாணவியர்கள் பிங்பாங், 7ஆம் வகுப்பு மாண வியர்கள் உடலுக்கும் உள்ளத் திற்கும் ஆரோக்கியம் தரும் யோகா, 8ஆம் வகுப்பு மாண வியர்கள் ஜீம்பா (Zumba) நடனமும், 9ஆம் வகுப்பு மாண வியர்கள் டம்பிள்ஸ்(Dumbbells) உடற்பயிற்சியும் , 10ஆம் வகுப்பு மாணவியர்கள் மூங்கில் நடனம், 11ஆம் வகுப்பு மாணவி யர்கள் பிரமிடு (Phyramid) மற்றும் 12ஆம் வகுப்பு மாணவி யர்களின் லெசியும் (Lezium) நடனமும், சிலம்பாட்டமும் இறு தியாக பெற் றோர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பெற்றவர்க ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குழு விளையாட்டில் எறிபந்து போட்டியில் முதல் இடத்தை இளஞ் சிவப்பு அணியினரும் இரண்டாம் இடத்தை மஞ்சள் அணியினரும் பெற்றனர். கபாடிப் போட்டியில் முதல் இடத்தை நீலம் அணியினரும் இரண்டாம் இடத்தை சிவப்பு அணியினரும் பெற்றனர். பள் ளியின் ஒட்டுமொத்த ஓவரால் சேம்பியன் சிப் (overall championship) இளஞ்சிவப்பு அணியினர் பெற்றனர்.
சிறப்பு விருந்தினர் உரை
உலக தடகள நிலை பயிற்சி யாளர் அண்ணாவி தன்னு டைய உரையில் மாணவியர் களுக்கு படிப்புடன் கூடிய விளையாட்டு அவசியம் என் பதை வலியுறித்தி கூறினார். அதற்கு ஏழ்மை நிலையில் இருந்து விளையாட்டின் மூலம் பல சாதனைகளையும் அரசு பதவிகளையும் எடுத்துக் காட்டாக கூறி பெற்றோர்க ளுக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்து ஒரு மணி நேரமாவது தங்களுடைய பிள்ளைகளை விளையாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். நன்றாக விளையாடும் பிள்ளைகள் தான் படிப்பிலும் சிறப்பாக இருப்பார்கள் என்பதை தன்னு டைய இரு சகோதரிகள் மூலம் எடுத்துக்கூறினார். இறுதியாக மாணவியர் செய்த அனைத்து உடற்பயிற்சிகளும் தனக்கு உற் சாகம் அளித்ததாக கூறினார்.
இறுதியாக 12ஆம் வகுப் பைச் சேர்ந்த பா.அக்சயா என்ற மாணவி நன்றி நவிழ நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பை சேர்ந்த க.அ. யாழினி , ப.ராஜலெட்சுமி , மு. ரிசானா சுல்பியா மற்றும் ஆ. பூமிகா இந்நிகழ்ச்சி முழுமை யும் தொகுத்தி வழங்கி சிறப்பித் தார்கள்.
No comments:
Post a Comment