ஹிந்தி ஊடகங்களில் மோடி ஃபோபியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

ஹிந்தி ஊடகங்களில் மோடி ஃபோபியா

    உக்ரைன் - ரஷ்யா இடையில் போர் துவங்கிய காலத்தில் இருந்தே மோடியை ஏதோ உலகை காக்க வந்த கதாநாயகன் போல் இரவும் பகலும் காட்டிக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் அமைச்சர்கள் போலந்து நாட்டிற்கும் ருமேனியா நாட்டிற்கும் சென்றுள்ளனர். அவர்கள் விளம்பரம் செய்ய கூடவே இந்தி சேனல் ஊடகவியலாளர்களையும் அழைத்துச்சென்றுள்ளனர். 

    அவர்களுக்கு உள்ள விசுவாசத்தால் பல கிலோமீட்டர் தூரம் நடந்து போலந்து எல்லையை கடந்துகொண்டு இருக்கும் மாணவர்களிடம் மோடியின் நடவடிக்கையால் நீங்கள் காப்பாற்றப்பட்டுள்ளீர்கள் என்று கூற அவர்களோ எங்களது பிணத்தைக் கொண்டு சென்று விளம்பரம் செய்யுங்கள் என்று காட்டமாக கூற அது நேரலை என்பதால் அந்த காட்சி அப்படியே ஒளிபரப்பாகிவிட்டது, இதனை அடுத்து அவர்களே மாணவர்களாக சிலரை ஏற்பாடு செய்து மோடியின் புகழைப் பாடிக் கொண்டு இருந்தனர். 

     அதே போல் ‘ஆஜ்தக்‘  என்ற இந்தி ஊடகவியலாளர் போலந்து எல்லையில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு ரயிலையே மோடி இந்தியர்களுக்காக விடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். அதில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பாக வந்து கொண்டு இருக்கின்றனர். 

    அந்த ரயில் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று மோடி புதினிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று கதைவிட்டுக் கொண்டு இருந்தனர். 

     அப்போது கேமரா முன்னால் கடுமையான குளிரில் நடந்துவந்த மாணவர்  இல்லை இல்லை இவர் பொய் சொல்கிறார். இந்தியர்களை ரயிலில் ஏற்ற உக்ரேனியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

    கார் மற்றும் இதர வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கேட்கிறனர். இங்கு தூதரக அதிகாரிகள் கூட வரவில்லை என்று சொல்லி அழுகிறார், அந்தக் காட்சியும் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது, உடனே அந்த ஊடகவியலாளர் என்னை வேலை செய்யவிடுங்கள் என்று கூறி அந்த மாணவனிடமிருந்து விலகி ஓடுகிறார்.  உடனடியாக அந்தக் காட்சி மாற்றப்படுகிறது

    இவ்வாறாகத்தான் இந்திய‌ ஊடகங்கள் உண்மைக்கு மாறான செய்திகளை பேசுகின்றன.  

    எப்படியாவது இதைவைத்து உத்தரப்பிரதேச தேர்தலில் வாக்குகளை வாங்கிவிடவேண்டும் என்று இவ்வாறான மோசடிகளில் இந்தி ஊடகவியலாளர்களை ஈடுபடுகின்றனர். 

     அதுமட்டுமல்ல, வாரணாசி தேர்தல் பரப்புரையில் கடைசி இந்தியரையும் உக்ரைனில் இருந்து வெளியேற்றிய பிறகுதான் இந்த நரேந்திர மோடி நிம்மதியாக தூங்கச்செல்வேன் என்று கூறுகிறார்.


No comments:

Post a Comment