திருச்சி, மார்ச் 30- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் 24.03.2022 அன்று காலை 11 மணியளவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை வழி காட்டுதலில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு பெரியார் நலவாழ்வு சங்கத்தின் இணைச் செயலர் அ.சமீம் வரவேற்புரை யாற்றினார்.
பெரியார் மருந்தியல் கல் லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் முன்னிலை வகிக்க துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.
காசநோய் அனைவரையும் பாதிக்கக்கூடியது
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திருச்சி மாவட்ட கிராம சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வு மருத்துவ சேவைகளின் இணை இயக்குநர் மருத்துவர் எஸ். லட்சுமி தமது சிறப்புரையில்,
காசநோய் என்பது ஏழை, பணக் காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் பாதிக்கக்கூடிய ஒரு தொற்றுநோய்.
முறையான மருத்துவ சிகிச்சை களை தொடர்ந்து எடுத்துக்கொண் டால் முற்றிலும் குணப்படுத்தக் கூடியது என்றும் இதனை அடி யோடு ஒழிக்க நலவாழ்வுத் துறையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த பெரியார் மருந் தியல் கல்லூரிக்கு தமது நன்றி களை தெரிவித்துக் கொண்டார்.
ஒன்று பட்டு செயல்பட்டால்
திருச்சி மாவட்ட காசநோய் மருத்துவ சேவைகளின் துணை இயக்குநர் மருத்துவர் எஸ். சாவித் திருச்சி மாவட்டத்தில் காசநோயினால் பாதிக்கப்பட்டோர் 89 சதவிகிதம் முறையான மருத்துவ சேவைகளை எடுத்துக்கொண்டு குணமடைந்துள்ளதாகவும் நூறு சதவிகித இலக்கை அடைய மருந் தாளுநர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனை வரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும் என்று உரை யாற்றினார்.
பரிசுகள் வழங்கல்
இந்நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்புத்துறையில் சிறப்பாக செயல் பட்ட தனியார் அமைப்புக் கள், மருத்துவமனைகள், மருத் துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக பெரியார் நலவாழ்வு சங்கத்தின் செயலர் பேராசிரியர் கே.ஏ.எஸ். முகமது சபீக் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. முன்னதாக உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி காந்தி நினைவு அரசு மருத்து வமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் 50க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப் பேரணியினை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட கிராம சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வு மருத்துவ சேவைகளின் இணை இயக்குநர் மருத்துவர் எஸ். லட்சுமி மற்றும் மாவட்ட காசநோய் மருத்துவ சேவைகளின் துணை இயக்குநர் மருத்துவர் எஸ். சாவித்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மாவட்ட கல்லூரி மாணவர்கள் திரளாக பங்கேற்ற இப்பேரணி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் துவங்கி திருச்சி ரயில் நிலைய சந்திப்பில் நிறைவுற்றது.


No comments:
Post a Comment