மேகேதாட்டு அணை; கருநாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்! ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

மேகேதாட்டு அணை; கருநாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்! ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை

சென்னை, மார்ச் 7- மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக .தி.மு.. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கருநாடக மாநில முதல மைச்சர் பசவராஜ் பொம்மை, மார்ச் 4ஆம் தேதி சட்டமன்றத் தில் தாக்கல் செய்த 2022-2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செல வுத் திட்ட அறிக்கையில், மேகேதாட்டு அணை கட்டு வதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரி விக்கப்பட்டு உள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டு வில் தடுப்பு அமைத்து 67.16 டி.எம்.சி. நீரை சேமிக்கவும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தவும், 400 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட நீர் மின் நிலை யம் அமைக்கவும் ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலானத் திட்டத் தைத் தயாரித்துள்ள கருநாடக அரசு, தற்போது நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேகேதாட்டில் அணை கட்டினால், தமிழ்நாட்டிற்கு காவிரியில் சொட்டு நீர் கூட வரத்து இருக்காது. காவிரி பாச னப் பகுதிகளில் வேளாண்மைத் தொழில் முற்றிலும் அழிந்து விடும் என்பதால், 2013 ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாடு தன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.

ஆனால் கருநாடக பா... அரசு, ஒன்றிய பா... அரசின் ஆதரவுடன் அணையைக் கட்டிவிட துடித்துக்கொண்டு இருக்கிறது.

காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 இல் வழங்கிய இறு தித் தீர்ப்பு மற்றும் உச்சநீதி மன்றம் 16.02.2018 இல் அளித் தத் தீர்ப்பு ஆகியவற்றை துச்ச மென தூக்கி எறிந்துவிட்டு, மேகேதாட்டு அணையைக் கட்டி முடிக்க கருநாடக அரசு துணிந்ததற்கு ஒன்றிய பா... அரசின் நயவஞ்சகப் போக்கு தான் காரணம் ஆகும்.

கருநாடக மாநிலத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான ஒன் றிய பா... அரசு, மேகேதாட்டு அணைப் பிரச்சினையில் தமிழ் நாட்டிற்குத் தொடர்ந்து துரோ கம் இழைத்து வருகிறது.

ஒன்றிய அரசால் அமைக்கப் பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மேகேதாட்டு அணை திட்டம் குறித்து விவா திக்கவோ, முடிவு எடுக்கவோ அதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல.

முன்னர் ஒன்றிய அரசின் நீர்வளத்துறைச் செயலாளராக இருந்து பணி ஓய்வு பெற்ற சவுமித்ரகுமார் ஹல்தர், தற் போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ளார். இவர் நீர்வளத்துறைச் செயலாளராக இருந்தபோது தான் மேகேதாட்டு அணை தொடங்க விரிவான திட்ட அறிக்கையை கருநாடக அர சிடம் பெற்று, அதை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத் தார்.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடை பெறும் போதெல்லாம், மேகே தாட்டு அணைத் திட்டத்தை கூட்டத்தின் விவாதப்பொரு ளாக நிகழ்ச்சி நிரலில் கொண்டு வந்துள்ளார்.

கடந்த 2020 நவம்பரில் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், கருநாடக மாநில அரசின் நீர்த் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 2021 ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு, மேகே தாட்டு அணை கட்டுவதற்கு கட்டுமானப் பொருட்கள் அங்கு குவிக்கப்பட்டு வருவ தாக ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது.

முதலமைச்சர் பொறுப்பு ஏற்றவுடன், முதன் முறையாக டில்லி சென்ற மு..ஸ்டாலின் அவர்கள், ஜூன் 16, 2021 இல் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்தபோது, மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று நேரில் வலியுறுத்தினார்.

பின்னர் ஜூலை 12, 2021 இல் முதலமைச்சர் தலைமை யில் அனைத்துக் கட்சிக் கூட் டம் கூட்டப்பட்டு, எந்தக் கார ணம் கொண்டும் மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 16, 2021 இல் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட் சிப் பிரதிநிதிகள் குழு டில்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகா வத்தைச் சந்தித்து, தமிழ்நாட் டின் எதிர்ப்பை எடுத்துக் கூறியது.

ஒன்றிய பா... அரசு, கருநாடக மாநிலத்திற்கு மறை முகமாக ஆதரவு அளித்து வரு வதால், மேகேதாட்டு அணை கட்ட கருநாடக அரசு தற் போது ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஒன்றிய பா... அரசு இதில் திட்ட வட்டமான அறிவிப்பை வெளி யிட வேண்டும். கருநாடக மாநிலத்தின் முயற்சியை முறி யடித்திட தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள வழக்கை துரிதப் படுத்த வேண்டும் என்று வலி யுறுத்துகிறேன்.

-இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment