வல்லம், மார்ச் 7- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 28ஆம் நாளன்று தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற் றது.
அறிவியல் கண்காட்சியை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி மற்றும் பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறிவித்யா ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இக்கண்காட்சியில் 80 அறிவியல் படைப்புகளும் 31 காட்சிப்படங்களும் காட்சிப் படுத்தப்பட்டன. இக்கண்காட் சியில் 272 மாணவர்கள் பங்கு பெற்றனர். இணையவழியாக பென்சில் ஒவியம்இ தமிழ் மற்றும் ஆங்கிலக் கட்டுரைகள் அறிவியல் யோசனைஇ அறிவியல் வினாடி வினா போன்ற வைகளில் 534 மாணவர்கள் பங்குபெற்றனர். 129 கல்வி நிறு வனங்களிலிருந்து 636 மாண வர்கள் கலந்துகொண்டனர்.
பரிசளிப்பு விழா நிகழ்ச்சி யில் 3ஆம் ஆண்டு வேதியியல் துறை மாணவர் எஸ்.சினேகா வரவேற்புரை ஆற்றினார். பல் கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி தலைமை உரையாற்றும் போது சுற்றுப்புற சுகாதார சூழல், எரிசக்தி, ஆரோக்கியம், உணவு. விவசாயம் மற்றும் கடல் வாழ் இனங்கள் கொண்டு இவ்அறிவியல் கண்காட்சி வடிவமைக் கப்பட்டுள்ளது என்றும், நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி .ராமனை பெருமைப்படுத்தும் விதமாக இந்நாள் தேசிய அறிவியல் நாளாக கொண்டாடப் படுகிறது என்றார்.
தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.சிவகுமார் உரையாற்றும் போது நான் மாணவர் பருவத்தில் இருக்கும் போது திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்திற்கு சென்று அறிவியல் கண்காட் சியை கண்டுகளித்துள்ளேன் என்றார். தாங்கள் கண்டுபிடிக் கும் ஒவ்வொரு படைப்புகளும் மனித சமுதாயத்திற்குப் பயன் படும் வகையில் இருக்க வேண் டும் என்றும், மேலும் இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்க ளுக்கு ஏகப்பட்;ட வாய்;ப்புகள் உள்ளது என்றும், கண்டுபிடிப் பது எல்லாம் வருங்காலத்திற்குப் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மத்திய, மாநில அரசுகள் மாணவர்களை ஊக்கப்படுத் தும் வகையில் மாணவர்கள் உருவாக்கும் அறிவியல் படைப் புகளுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார்கள். இந்த ஊக்க தொகை வழங்குவதால் புதுமை யான அறிவியல் கண்டுபிடிப் புகள் கண்டுபிடிக்கப்படும் என் பதற்காக நிதி ஒதுக்குகிறார்கள். மேலும் தமிழக முதல்வர்; அவர்களால் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது என் றும் கூறினார்.
‘அடல் டிங்கர்’ ஆய்வகம் மாணவர்களை ஊக்கப்படுத்து வதற்காகவும் ஆராய்ச்சியை மேம்படுத்தவும் தமிழகத்தில் உள்ள பல அரசுப்பள்ளிகளில் ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.
முனைவர் இர் ஃபானா பேகம் திட்டஅலுவலர் விஞ்ஞான் பிரசாத் எடுசாட்; அவர்கள் சிறப்புரை ஆற்றும் போது தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் பலமுறை தனது அறிவியல் கண்டுபிடிப்பில் தோற் றாலும் அவருடைய விடா முயற்சியால் பல்பை கண்டு பிடித்தார். அதேபோல மாண வர்கள் தாங்கள்; தோல்வியுற் றாலும் எடிசனைப் போல விடாமுயற்சி செய்தால்; நீங்க ளும் வெற்றி பெறலாம் என்று கூறி மாணவர்களை வாழ்த் தினார்.
பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நன்றியுரையை மூன்றாம் ஆண்டு சுகிப்பிரியா வழங் கினார்.
No comments:
Post a Comment