சென்னை, மார்ச் 6 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 40 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று திமுக முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சி கள், 138 பேரூராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
இவற்றில் மொத்தம் 12,820 வார்டுகள் உள்ளன.
இந்த வார்டு உறுப்பினர் பதவிகளை பிடிப்பதற்காக 57,746 வேட்பாளர்கள் போட்டியிட் டனர்.
இவற்றுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்.19ஆம் தேதி நடை பெற்றது. மாநிலம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவாகின.
இதில் 40%-க்கு மேலான வாக்குகளை திமுக பெற்றுள்ளது. 2ஆம் இடத்தை அதிமுக பெற் றுள்ளது.
மாநகராட்சிகளுக்கான தேர்தலில் திமுக 43.59%, அதிமுக 24%, பாஜக 7.17%, காங்கிரஸ் 3.16%, நாம் தமிழர் 2.51%, மநீம 1.82%, பாமக 1.42%, அமமுக 1.38%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1.31%, தேமுதிக 0.95%, மதிமுக 0.90%, இந்திய கம்யூனிஸ்ட் 0.88%, விசிக 0.72%, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 0.27% வாக்குகள் பெற்றுள்
ளன.
நகராட்சிகளுக்கான தேர்தலில் திமுக 43.49%, அதிமுக 26.86%, பாஜக 3.31%, காங்கிரஸ் 3.04%, பாமக 1.64%, அமமுக 1.49%, மார்க்சிஸ்ட் 0.82%, நாம் தமிழர் கட்சி 0.74%, மதிமுக 0.69%, தேமுதிக 0.67%, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 0.64%, விசிக 0.62%, இந்திய கம்யூனிஸ்ட் 0.38%, மநீம 0.21% வாக்குகள் பெற்றுள்ளன.
பேரூராட்சிகளுக்கான தேர்தலில் திமுக 41.91%, அதிமுக 25.56%, பாஜக 4.30%, காங்கிரஸ் 3.85%, பாமக 1.56%, அமமுக 1.35%, மார்க்சிஸ்ட்1.34%, நாம் தமிழர் கட்சி 0.80%,விசிக 0.61%, தேமுதிக 0.55%, இந்திய கம்யூனிஸ்ட் 0.44%, மதிமுக 0.36%வாக்குகள் பெற்றுள் ளன.
No comments:
Post a Comment