சென்னை, மார்ச் 6 வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது.
இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந் திரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:-
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்று அதே பகுதியில், வடதமிழக கடலோர பகுதியில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 36 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்
கால் பகுதிகளில் கனமழை
பெய்யும்.
8ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) செங் கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதி களுக்கு இன்றும், மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகள், வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு நாளை 7ஆம் தேதியும் மீனவர்கள் செல்ல வேண் டாம் என்று அறிவுறுத்தப்படு கிறார்கள்.
சென்னையை பொறுத்தமட்டில் வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment