புதுடில்லி, மார்ச் 6 உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் விலைவாசி உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ந் தேதி தொடுத்துள்ள போர், இந்த இரு நாடுகளையும் தாண்டி உலக நாடுகள் அனைத் திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக பொருளா தாரத்தில் பெரும் பாதிப்புக்கு வழி வகுத்துள்ளது.
போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், அதன் தாக்கம் சங்கிலித்தொடர்போல ஒவ்வொன்றிலும் பிரதிபலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையொட்டிய பொருளா தார நிபுணர்களின் கருத்துகள் வருமாறு:-
சுனில் குமார் சின்கா (ஆராய்ச்சி இயக்குனர், முதன் மை பொரு ளாதார நிபுணர், இந்தியா ரேட்டிங்ஸ்):-
இந்தியாவில் விலைகள் உயர்வதற்கு முக்கிய காரணமாக எரிபொருள் இருக்கும். அதன் தாக்கம், அரசின் பதிலளிப்பை பொறுத்து அமையும். வரி களைக் குறைப்பதின் மூலம் பொதுமக்களுக்கு அரசு சலுகை வழங்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்த அனு மதித்தால், அது ஒரே நேரத்தில் பொதுமக்கள் தலையில் சுமத் துவதைவிட வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். எண் ணெய் நிறுவனங்கள், சுமையின் ஒரு பகுதியை ஏற்றால், அதன் தாக்கம் வித்தியாசமாக இருக் கும். தற்போது உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 120 டாலராக (சுமார் ரூ.9,000) உள்ளது.
என்.ஆர்.பானுமதி, துணை வேந்தர், பி.ஆர்.அம்பேத்கர் பொருளாதார பல்கலைக் கழகம்):-
விவசாய பொருட்கள் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களுமே பணவீக்க அழுத்தத்தைக் காணக்கூடும் என்று நான் கருதுகிறேன். கச்சா எண்ணெய் எங்கெல்லாம் மூலப்பொருளாக மாறுகிறதோ, அங்கு வெளிப்படையாக விலை உயர்வதை காண்பீர்கள். பண வீக்கம் என்னவாக இருந்தாலும், அந்த அளவுக்கு வளர்ச்சி பாதிப்பு இருக்கும். பணவீக்கம் 2 சதவீத புள்ளிகள் அதி கரிக்கப்போகிறது என்றால், உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி 2 சதவீத புள்ளிகள் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி ஆகியவை வாரந்தோறும் கூர்மையான விலை உயர்வை கண்டுள்ளன. அலுமினியம், தாமிரம், உருக்கு போன்ற பிற பொருட்களின் விலைகள், உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கத்தொடங்கியதில் இருந்து கடுமையாகி உள்ளன.
உலக கச்சா எண்ணெய் வினியோகத்தில் 12 சதவீதத் தினை ரஷ்யா வைத்திருக்கிறது. அலுமினியம், தாமிரம், நிக்கல் போன்ற உலோகங்களின் முக்கிய வினியோகஸ்தராகவும் உள்ள நிலையில், உக்ரைனுட னான அதன் போர் உல களவிலான விலைப்போக்கு களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே பொதுமக்கள் விலைவாசி உயர்வை சந்திக்க தயாராகி விடுவதைத்தவிர வேறு வழியில்லை.
5 மாநில தேர்தலால் இந்தி யாவில் பெட்ரோல், டீசல் உயர்த்தப்படவில்லை என்ற பார்வை, அரசியல்நோக்கர்கள் மத்தியில் உள்ளது. 7-ந் தேதி உத்தரபிரதேசத்தில் இறுதிக் கட்ட தேர்தல் முடிகிற தரு ணத்தில் அவற்றின் விலைகள் மறுபடியும் உயரத்தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பு உள் ளது. அது அப்படியே எல்லா வற்றிலும் எதிரொலிக்கும்.
No comments:
Post a Comment