அரியலூர், மார்ச் 5 அரியலூர் அருகே மாளிகைமேட்டில் இரண் டாம் கட்ட அகழாய்வுப் பணி முதலமைச்சரால் தொடங்கி வைக் கப்பட்ட நிலையில் அகழ்வா ராய்ச்சிப் பணியில் சில அரிய பொருட்கள் கிடைத்து வருகிறது.
தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் கடந்த 2020-_2021-ஆம் ஆண்டிற் கான அகழாய்வுப் பணிகள் தமிழ்நாட்டில் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் என 7 மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் தொடங்கப் பட்டது.
இதில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத் தில் உள்ள, சோழப்பேரரசரான முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப் படும் மாளிகைமேடு பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்றன.
இந்த பணியின்போது கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினாலான ஓடுகள், இரும்பினாலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள், பானை விளிம்புகள், சிறிய அளவிலான அரிய பொருட்கள், கட்டடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்தன. அவை தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண் மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச் சுவரும், பின்னர் அரண்மனையின் தொடர்ச்சியாக 2-ஆவது பாகமும் கண்டறியப்பட்டது. வடிகால் அமைப்பு போன்ற சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்தப் பணியில் நாளொன்றுக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். முதல் கட்ட பணியில் 30-க்கு 20 என்ற சதுர மீட்டர் அளவில் இந்த அகழ்வாராய்ச்சி பணி தொடங்கி நடந்தது என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முதற்கட்ட அகழாய்வுப் பணி நிறைவடைந்தது.
இந்நிலையில் இப்பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு மேற் கொள்ள ஒன்றிய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இரண்டாம் கட்ட அக ழாய்வின்போது சோழர் காலத்து கட்டடங்கள் இருந்ததற்கான சான்றாக பல்வேறு தொல்லியல் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்த நிலையில், தற்போது 10- க்கு 10 என்ற சதுர அடி அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அரண்மனையின் சுற்றுச் சுவர்கள், இரும்பிலான ஆணிகள், மண்பாண்ட விளிம் புகள் போன்றவைகள் கிடைத் துள்ளன. கைக் காப்பு போன்ற தங்கத்திலான காப்பு ஒன்று தற்போது கிடைத்துள்ளது. இதன் எடை சுமார் 7.920 கிராம் எடை கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. இதன் நீளம் 4.9 மி.மீட்டரும், அதன் நடுவில் அமைந்துள்ள தடிமனான பகுதியின் அளவு 4 மி.மீட்டர் என்ற அளவில் கிடைத் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து நடை பெற்று வரும் அகழ்வாராய்ச்சிப் பணியில் சிறு சிறு எலும்பு துண் டுகள் கிடைத்துள்ளது.இந்த எலும்பு துண்டுகள் தொல்லியல் துறையின் ஆய்வுக்கு பின்னரே இது மனிதர்களின் உடல் எலும் புகளா என ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதில் தற்போது 12 பணியாளர்கள் மட் டுமே அகழ்வாராய்ச்சிப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment