தமிழ்நாட்டில் புதிதாக 261 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 261 பேருக்கு கரோனா

சென்னை, மார்ச் 5 தமிழ்நாட்டில் நேற்று 261 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக நேற்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 51 ஆயிரத்து 49 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 156 ஆண்கள், 105 பெண்கள் என மொத்தம் 261 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 76 பேரும், கோவை யில் 37 பேரும், செங்கல்பட்டில் 31 பேரும், திருவள்ளூரில் 14 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த பட்சமாக அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடு துறை, புதுக்கோட்டை, ராணிப் பேட்டை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர் ஆகிய 11 மாவட்டங்களில் நேற்று புதிதாக ஒருவருக்கு கூட கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

    தமிழ்நாட்டில் இதுவரை, 34 லட்சத்து 50 ஆயிரத்து 594 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட் டுள்ளது.

    நேற்றைய நிலவரப்படி 860 பேர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    தமிழ்நாட்டில் நேற்று கரோனா பாதிப்பால் தஞ்சாவூர் மாவட் டத்தை சேர்ந்த 58 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். 37 மாவட் டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழநாட்டில் இதுவரை மொத் தம் 38 ஆயிரத்து 11 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 705 பேர் குண மடைந்து வெளியேறியுள்ளனர்.  சிகிச்சையில் 3 ஆயிரத்து 505 பேர் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment