டில்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

டில்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயம்

ஏப்.2ஆம் தேதி: தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

புதுடில்லி, மார்ச் 29 தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்னை தேனாம் பேட்டையில் அமைந் துள்ளது. மேனாள் முதலமைச் சரும், தி.மு.க. தலைவராகவும் இருந்த கலைஞர், அண்ணா அறிவாலயத்தை அங் குலம், அங்குலமாகப் பார்த்து, பார்த்து கட்டி எழுப்பினார். 

1987-ஆம் ஆண்டு அண்ணா அறிவா லயத்தை  கலைஞர் திறந்து வைத்தார். தி.மு.க.வின் அடையாள மான அண்ணா அறிவாலயத்தின் மற்றொரு சகாப்தம் தலைநகர் டில்லியில் தற்போது கட்டப் பட்டுள்ள அண்ணா- - கலைஞர் அறிவா லயம் ஆகும்.

 நாடாளுமன்றத்தில் 7 உறுப்பி னர்களுக்கு மேல் பெற்றுள்ள கட்சி களுக்கு டில்லியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி, 2013-ஆம் ஆண்டு டில்லி தீனதயாள் உபாத்யா மார்க் பகுதியில் தி.மு.க.வுக்கு கட்சி அலுவலகம் கட்ட இடம் வழங்கப்பட்டது. இருந்த போதிலும் கடந்த ஆண்டுதான் தி.மு.க.வின் கட்சி அலுவலகம் கட்டும் பணித் தொடங்கியது.

சென்னையை சேர்ந்த பிரபல கட்டட நிறுவனம் இதற்கான கட்டு மானப் பணிகளை மேற்கொண்டது. 3 மாடி களுடன் எழில்நயத்துடன் கட்டப் பட்டுள்ளது. 

அதில், அண்ணா- - கலைஞர் அறி வாலயம் என்று தமிழிலும், ஆங்கிலத் திலும் எழுதப்பட்டுள்ளது. நுழைவுவாயிலில் அமைக்கப்பட்ட 4  பெரும் தூண்கள் மாளிகையை கண் முன்னே நிறுத்துகின்றன. 

நுழைவுவாயிலில் ஒரு புறம் அண் ணாவின் மார்பளவு சிலையும், மற்றொரு புறம் கலைஞரின் மார்பளவு சிலையும் இடம் பெற்றுள்ளன. கட்டடம் தொன் மையான செட்டிநாடு கட்டடக் கலை யைப் பிரதிபலித் தாலும், அதன் உள்ளே பல்வேறு அதிநவீன வசதிகள் இருப்பதால் நவீனத்தையும் பறை சாற்றுகிறது.

கட்டடத்தின் கீழ்தளத்தில் கட்சிக் கூட்டங்களை நடத்துவதற் காக மேடை யுடன் கூடிய பெரிய அரங்கம் உள்ளது. அதன் அருகே தலைவர்கள் ஓய்வு எடுப்பதற்காக சிறிய அறைகள் உள்ளன. அதன் வாசலில் 3 மாடிகளுக்கும் செல்வதற் கான 'லிப்ட்' களும் உள்ளன. 'லிப்ட்'  முன்னால் முகம் பார்க்கும் பெரிய கண்ணாடி சுவரில் பதிக்கப் பட் டுள்ளது. 

முதல் மாடியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசும் இடம், தலைவருக்கான தனி அறை, அழகூட்டும் வரவேற்புரை, தொலைக் காட்சிப் பார்க்க தனி அறை ஆகியவை இடம் பெற் றுள்ளன.

முதல் தளத்திலும், 2-ஆம் தளத் திலும் கருத்தரங்கு அறைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. 

சுழலும் இருக்கை உள்பட நவீன வசதிகளுடன் 2 அறை களும் கட்டப் பட்டுள்ளன. 2-ஆவது தளத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருப்பது போன்ற நூலகமும், அங்கு அமர்ந்து படிப்ப தற்கான வசதிகளும் செய்யப் பட்டுள்ளன. 

செய்தியாளர்களுக்கென தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இணையதள வசதி மற்றும் தொலைபேசி வசதிகளும் செய்யப் பட்டுள்ளன.

3-ஆவது தளத்தில்   தமிழ்நாட்டில் இருந்து வரும் நிர்வாகிகள் தங்கிக் கொள்வதற்காக நட்சத்திர ஓட்டல்களுக்கு நிகரான வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன. தலை வருக்காக ஒரு சிறப்பு தங்கும் அறையும் கட்டப் பட்டுள்ளது. 

உள்புற சுவர்களில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருப்பது போன்று மரத்தினாலான வேலைப் பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

மாடிப் படிகளில் முகம் பார்த்தால் அதனை பிரதிபலிக்கும் வகையிலான வெள்ளை நிற கிரானைட் கற்கள் பதிக்கப்பட் டுள்ளன.

டில்லி தி.மு.க. அலுவ லகத்தை ஏப்ரல் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். விழாவுக்கு தி.மு.க. பொதுச் செயலா ளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரை முருகன் தலைமை தாங்கு கிறார்.

தி.மு.க. பொருளாளரும், நாடாளு மன்ற தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார். 

விழாவில் பங்கேற்க வருமாறு ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சி களின் தலைவர்களுக்கு தி.மு.க. நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே அழைப்பிதழ் கொடுத்து உள்ளனர்.

No comments:

Post a Comment