உக்ரைனில் மீட்கப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் அழைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

உக்ரைனில் மீட்கப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் அழைப்பு

மும்பை, மார்ச் 29-  உக்ரைனில் மீட்கப்பட்ட இந் திய மருத்துவ மாணவர் களுக்கு ரஷ்ய பல்கலைக் கழகம் அழைப்பு விடுத் துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத் ததால் அந் நாட்டில் சிக்கி தவித்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை ஒன்றிய அரசு மீட்டது.

இந்த மாணவர்களின் மருத்துவபடிப்பு குறித்த எதிர்காலம் கேள்விக்குறி யாக இருந்தது. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த நிலையில் உக் ரைன் பல்கலைக்கழகத் தில் இருந்து நாடு திரும்பும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

கூடுதல் கட்டணம் இல்லாமலும், நுழைவு தேர்வு இல்லாமலும் மாணவர்கள் ரஷ்ய மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேரலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் கிரி மியாவில் உள்ள நிறுவ னங்கள் உக்ரைனிலிருந்த வெளிநாட்டு மருத்துவ ஆர்வலர்களையும், இந்தியாவை தளமாக கொண்ட ஆலோசகர்க ளையும் அணுகி தங்களது கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வழங்கும் பணியை தொடங்கியுள்ளன.

கஜகஸ்தான், ஜார் ஜியா, ஆர்மேனியா, பெலா ரஸ், போலந்து ஆகிய நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஏற்கெ னவே இதே மாதிரி இட மாற்றத்திற்கான உதவி களை அளித்துள்ளன.

மீட்பு நடவடிக்கை யின் போது 140 இந்திய மாணவர்கள் நாடு திரும் புவதற்கு பதிலாக மால் டோவா சென்று சிசினா வில் உள்ள அரசாங்கத் தால் நடத்தப்படும் நிகோ லே டெஸ்டெமி டனு ஸ்டேட் யுனிவர் சிட்டி ஆப் மெடிசின் அண்ட் பார்மசியில் (எஸ்.யூ. எம்.பி.) நேரடியாக அனு மதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக அந்த கல்வி நிறுவனத்தின் பன்னாட்டு பிரதிநிதி டாக்டர் கொர்னேலியாருடோஸ் கூறியதாவது:-

கடந்த வாரம் வரை உக்ரைனில் இருந்து 140 இந்தியர்கள் நேரடியாக வந்தனர். அவர்களை எங்கள் பல்கலைக்கழகத்தில் சேர்த்துள்ளோம்.

நட்பின் அடையாளமாக இந்த செமஸ்டருக்கு கட்டணம் வசூலிக்க மாட்டோம்.

செப்டம்பர் முதல் கட்டணத்தை மட்டுமே தொடங்குவோம். எங்களிடம் அதிக வசதிகள் இருக்கிறது. 

முதல், இரண்டாம் மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களை ஒரே ஆண்டிற்கு அழைத்து செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். இதனால் நேரம் இழப்பு ஏற்படாது. 

இவ்வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment