வாசிங்டன், மார்ச் 6 உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷ்யாவில் புதிய விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
உக்ரைனில் இருந்து வரும் ஒளிப்படங்கள் மற்றும் செய்திகளைக் கண்டு வருத்தமடைகிறோம். மேலும் ரஷ்யாவின் இந்த நியாயமற்ற சட்ட விரோதமான ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம். ரஷ்யாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்து விதமான புதிய விற்பனைகளையும் நிறுத்தி வைக்கிறோம்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இணையத் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். உக்ரைனில் உள்ள மக்களுக்கு உதவ நாங்கள் தொடர்ந்து வளங்களை திரட்டி வருகிறோம் என்று கூறியுள்ளது.
No comments:
Post a Comment