உக்ரைன் மீதான போர் வாகன தயாரிப்பை பாதிக்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

உக்ரைன் மீதான போர் வாகன தயாரிப்பை பாதிக்கும்

புதுடில்லி, மார்ச் 6 உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக நாட்டின் வாகன தயாரிப்பு மேலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என வாகன முகவர்கள் கூட்டமைப்பான எப்..டி.., தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த பிப்ரவரி மாதத்தில், உள்நாட்டு பயணியர் வாகன சில்லரை விற்பனை, 7.84 சதவீதம் சரிவை கண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில், மொத்தம் 2.58 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டு பிப்ரவரியில் 2.38 லட்சம் வாகனங்களே விற்பனை ஆகியுள்ளன.

No comments:

Post a Comment