புதுடில்லி, மார்ச் 7- இந்தியாவின் நடப்பு ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என, லண் டனை சேர்ந்த ஆலோசனை நிறுவன மான ‘குளோபல் டேட்டா’ தெரிவித்து உள்ளது.
உக்ரைன் தாக்குதல் காரணமாக, வளர்ச்சி குறித்த இதற்கு முந்தைய கணிப்பை விட, தற்போது குறைத்து அறிவித்துள்ளது. இது குறித்து, இந்நிறு வனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் - ரசியா போர் காரணமாக, இந்தியாவின் ஏற்றுமதியில் எதிர்மறையான பாதிப் புகள் ஏற்பட்டு வருகின்றன.மேலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், உள்ளீட்டு விலை அதிகரித்து வருகிறது. அத்துடன் நுகர்பொருட்கள் விலையும் உயர்ந்து வருகிறது.
இதனையடுத்து, இந்தியாவின் நடப்பு ஆண்டுக்கான மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சியை, முந்தைய கணிப்பிலிருந்து 0.1 சதவீதம் குறைத்து, 7.8 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கி றோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
நாட்டின் இறக்குமதியை பொறுத்த வரை, உக்ரைன் மற்றும் ரசியாவின் பங்கு, மொத்த இறக்குமதியில் 2.2 சத வீதமாகும். இது, கடந்த 2020ஆம் ஆண்டு நிலையாகும்.உக்ரைன் போர் காரணமாக, நாட்டின் பணவீக்க விகி தம், நடப்பு ஆண்டில் 5.5 சதவீதமாக இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, கடந்த 2021இல் 5.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment