அய்.நா, மார்ச் 7- ‘இலங்கையின் சொந்த நலனுக்காக தமிழர்களின் சமத்து வம், நீதி, அமைதி மற்றும் கண்ணி யம் ஆகிய எதிர்பார்ப்புகள் நிறை வேற வேண்டும்’ என்று அய்.நா. மனித உரிமைகள் அமைப்பில் இந் தியா வலியுறுத்தி உள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு மற்றும் மனித உரிமை களை ஊக்குவித்தல் தொடர்பான கூட்டம் அய்.நாவில் நடந்தது. இதில், இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் இந்திரமணி பாண்டே கலந்துகொண்டு பேசுகையில், ‘‘இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பது தொடர் பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தனது உறுதிமொழிகளை நிறை வேற் றுமாறு இலங்கைக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.
இலங்கையில் உள்ள தமிழர் களின் சமத்துவம், நீதி, அமைதி மற் றும் கண்ணியம் ஆகிய எதிர்பார்ப் புகள் நிறைவேற்றப்படுவது இலங் கையின் சொந்த நலனுக்காகவே என்று இந்தியா நம்புகிறது. இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தத் திற்கு உட்பட்டு இலங்கை அரசாங் கம் வழங்கிய உறுதிமொழிகளுக்கு இது பொருந்தும். தமிழர்களின் கவலைகளைத் தீர்க்கும் கருவியாக 13ஏ எனப்படும் 13ஆவது திருத் தத்தை இலங்கை தொடர வேண் டும். இலங்கையின் மனித உரிமை கள் நிலைமை மற்றும் நல்லிணக்கப் பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு அம்சங்களில் பன்னாட்டு சமூகம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் இலங்கை அர சாங்கம் பேச்சுவார்த்தை நடத்து கிறது. இதுபோன்ற உரையாடல் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மாகாண சபைக ளுக்கான தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு இலங்கை அரசாங் கத்தை இந்தியா தொடர்ந்து வலி யுறுத்தும்’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment