மூலப்பொருட்கள் விலையை குறைக்க அரசிடம் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

மூலப்பொருட்கள் விலையை குறைக்க அரசிடம் கோரிக்கை

சென்னை, மார்ச் 7- குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என, தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கம், ஒன் றிய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளது.

    ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கத்தின் தலை வர் மாரியப்பன், பொதுச் செயலர் நித்தியானந்தன் ஆகியோர் அளித்த மனு வருமாறு: 

    நாடு முழுவதும் 6 கோடி குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங் கள் உள்ளன. இதில், கரோனா ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக, 54 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டதாக, தேசிய சிறுதொழில் வாரியம் நடத் திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    மூடப்பட்ட தொழிற்சாலை களை மீண்டும் திறக்க, சிறப்பு நிதியுதவி திட்டத்தை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும். ஒன்றிய பட்ஜெட்டில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு, மிகக் குறைந்த அளவாக, 15 ஆயிரம் கோடி முதல், 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை மட்டுமே, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.விவசாய துறைக்கு 1.50 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது, மொத்த பட்ஜெட் டில் 30 சதவீதமாக உள்ளது.

    குறு, சிறு தொழில்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, 1 சதவீதம் மட்டுமே.விவசாயத் துறையும், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறையும், நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்திக்கும், வேலை வாய்ப்புக்கும் சமமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. எனவே, தொழில்களுக்கு வழங்கப்பட்ட நிதி குறைபாட்டை சரிசெய்ய வேண்டும். உற்பத்திக்கு தேவைப் படும் இரும்பு, அலுமினியம், தாமி ரம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பிளாஸ்டிக் ஆகிய மூலப் பொருட் களின் விலையைக் குறைக்க வேண்டும்.

    மூலப்பொருட்களின் விலையை, அடுத்த ஆறு மாதங்கள் வரை அரசு உயர்த்தக் கூடாது. மேலும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் இரும்பு மூலப் பொருட் களுக்கு, இறக்குமதி வரியில் முழுத் தீர்வை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment