ஏழைகள் மீதான தாக்குதல்கள்-ஜாதியப் பாகுபாடுகள் அதிகரிப்பு!: முலாயம் சிங் கவலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

ஏழைகள் மீதான தாக்குதல்கள்-ஜாதியப் பாகுபாடுகள் அதிகரிப்பு!: முலாயம் சிங் கவலை

ஜான்பூர், மார்ச் 7- நாட்டில் ஏழைகள் மீதான தாக் குதல்கள், ஜாதியப் பாகுபாடுகள் அதிகரித்து வருவ தாக சமாஜ் வாதி கட்சியின் நிறு வனர் முலா யம் சிங் கவலை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேர வைக்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சனிக்கிழமையுடன் நிறை வடைந்தது. முன்னதாக ஜான்பூரில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் (82) பிரச் சாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது, “ஜாதியின் அடிப்படை யிலான பாகுபாடு மற்றும் அநீதி, ஏழைகளுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகள் உள்ளிட்ட பெரிய சவால்களை நாடு இன்று எதிர்கொள்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சமாஜ் வாதி கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஏழைகள், இளைஞர்கள், படிக்காதவர்கள் மற்றும் சமூகத்தில் புறக்கணிக் கப் பட்ட பிரிவினருக்காகவே சமாஜ் வாதி கட்சி எப்போதும் பாடு பட்டு வருகிறதுஎன்று முலாயம் தெரிவித்துள்ளார். மேலும், “விவ சாயிகள் கடுமையாக உழைத்த போதும், விளைபயிர்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்பது நமது முன்னுள்ள சவால். விவசாயிகளுக்கு இப்போது எந்த பலனும் கிடைப்பதில்லை. விவசாயிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வில்லை. அதேபோல் இன்னும் பல துறைகள் இன்று புறக்கணிக்கப்படுகின்றன.

மாநிலத்தில் வேலைவாய்ப் பின்மை பிரச்சினையை இந்த தேர்தலில் எழுப்பி வரும் ஒரே கட்சி சமாஜ்வாதி கட்சி தான். எனவே, சமாஜ்வாதி கட்சி ஆட் சிக்கு வந்தால் இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கப் படும்என்றும் முலாயம் சிங் குறிப் பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment