ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு ‘நீட்‘ சாவுமணி அடிக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு ‘நீட்‘ சாவுமணி அடிக்கிறது

 தமிழ்நாட்டு வழியில் எதிர்க்க வேண்டும் மகிளா கிசான் யூனியன் கருத்து

சண்டிகர், மார்ச். 7- ஏழை, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவுக்குநீட்' தேர்வு சாவுமணி அடிக்கிறது என மகிளா கிசான் யூனியன் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்த அமைப்பின் பஞ்சாப் மாநில தலைவர் பீபி ராஜ்விந்தர் கவுர் ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

'நீட்'தேர்வு காரணமாக ஏழை, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கனவை துறக்கவேண்டிய நிலைக்கோ அல்லது மலிவான கட்டணத்துக்காக வெளிநாடு செல்ல வேண்டிய சூழலுக்கோ தள்ளப்படுகின்றனர். எனவே இந்த 'நீட்' தேர்வை தமிழ்நாட்டின் வழியில் அனைத்து மாநில கட்சிகளும் எதிர்க்க வேண்டும்.

உக்ரைனில் மருத்துவ படிப்பு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் தவிப்பது, ‘நீட்தேர்வின் வெட்கமற்ற முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. அங்கு நம் மாணவர் களின் இறப்பு, இந்திய மன சாட்சிக்கு கேள்வி எழுப்பி யுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள நமது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய பா... அரசு தவறிவிட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆணவப்படுகொலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்

இந்திய கம்யூ.கட்சி வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 7- ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்றும் தருணம் இது என தமிழ்நாடு ஒடுக்கப் பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் ஆர்.நல்ல கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலா ளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத் தப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் வரவேற்கிறது. வழக்கில் தொடர் புடைய பலரும் பிறழ்சாட்சியாக மாறிவிட்ட சூழலில் சிறப்பு வழக்குரைஞர் .பா.மோகன் சாட்சிகளை மறு விசாரணை செய்து, நீதியை போராடி பெற்றிருக்கிறார். இது பாராட்டுக்குரியது. இதேபோல் அவர் பல வழக்கு களில் சமூக நீதிக்காக போராடி வருவதும் சிறப்புக்குரியது. ஜாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக சிறப்பு வழக்கு ரைஞர் நியமனம் மற்றும் ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டம் இயற்றும் தருணம் இது என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்துகிறோம்.

- இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment