உக்ரைன் மீது தாக்குதல்: ரசியாவை கண்டித்து கஜகஸ்தானில் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

உக்ரைன் மீது தாக்குதல்: ரசியாவை கண்டித்து கஜகஸ்தானில் போராட்டம்

கஜகஸ்தான், மார்ச் 7-  உக்ரைன்  மீது ரசியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள், பொது மக்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், ரசியா போரை நிறுத்த வில்லை. இதனால், பல நாடுகள் ரசியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்து வருகின்றன. மேலும் ரசியாவிற்கு எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், ரசியாவின் கொடூரத் தாக்குதலை கண்டித்து கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் சோவியத் ஒன்றிய நிறுவனர் விளாடிமிர் லெனின் சிலை முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரசியாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.


No comments:

Post a Comment