தமிழ்நிலத்தை திமுக என்றும் காக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

தமிழ்நிலத்தை திமுக என்றும் காக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை, மார்ச் 7- தமிழ்நாட்டில் அண்ணா தலைமையில் முதன்முதலில் திமுக ஆட்சியமைத்த நாள் (மார்ச் 6) வாழ்த்துச் செய்தியாக மு..ஸ்டாலின் குறிப்பிடுகையில்  ''தமிழ்நிலத்தை திமுக என்றும் காக்கும்'' என்று உறுதிபட கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட் டுள்ள பதிவில் திமுக தலைவர் முதலமைச்சர் மு..ஸ்டா லின் குறிப்பிட்டுள்ளதாவது: ''தமிழர் தலைமுறை தழைக் கத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த பேரறிஞர் அண்ணா அவர் கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியமைத்த நாள் இன்று (மார்ச் 6)!

எத்தனை சோதனைகள் - அடக்குமுறைகள் - அவ தூறுகள்! அத்தனையும் கடந்து தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு எத்தனை எத்தனை சாதனைகள்!

இனப் பகைவரும் அவர்தம் கைக்கூலிகளும் ஆயிரம் அரிதாரம் பூசி வந்தாலும், அவர்களுக்கே உரிய பொய்யும் புரட்டும் வன்மமும் கலந்து வசை மாரி பொழிந்தாலும், பெரியார் - அண்ணா - கலைஞர் காட்டிய வழியில் தி.மு. கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும்! - இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment