‘வாழ்வியல் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் ‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதி வருவதை பலர் பார்த்திருக்க வாய்ப்பிருக்காது. ஏன் என்றால் ‘விடுதலை’ நாளிதழில் மட்டுமே அவை வரும். ஆனால் அவையெல்லாம் தொகுக்கப்பட்டு 16 தொகுதிகளுக்கு மேல் நூலாக வந்துவிட்டது.
'மூத்தவர்கள் பார்வைக்கு' எனும் தலைப்பில் இரண்டு நாள் கட்டுரை எழுதியுள்ளார். அதைப் படித்தவுடன் அனைவர்க்கும் அனுப்ப நினைத்துள்ளேன். ஏன் என்றால் ‘ஆசிரியரோ பெரியாரோ எழுதினால், பேசினால் கடவுள் இல்லை மதம் இல்லை’ ஜாதி இல்லை என்று பேசுவார்கள், எழுதுவார்கள் என்று பலர் படிக்க விரும்புவதில்லை. நமது நண்பர்கள் காலை எழுந்தவுடன் ஏதாவது ‘சாமி’ படம் பதிவு செய்து காலை வணக்கம் என்று சொல்வார்கள்.
முதிய பருவத்தில் நமக்கு ஓய்வு நிறைய கிடைக்கும் - ஓய்வுக் காலத்தை எப்படி உபயோகமாகக் கழிப்பது? உடல் நலத்தோடு நீண்ட நாள் எப்படி வாழ்வது? என தனது அனுபவங்கள், பிறரது அனுபவங்கள் - அதே போல இந்நாட்டு மேல்நாட்டு அறிஞர்கள் கருத்து என ஏராளக்கணக்கில் எழுதி 16 தொகுதிகள் வந்துவிட்டன. வாங்கிப் படித்துப் பாருங்கள். நானும் ஓரளவு பல பேர் எழுதியுள்ள நூல்களை நேரம் கிடைக்கும் போது வாசிப்பேன். ஜாதி, மதம், கடவுள், அரசியல், சாமி, பூதம் என அனைத்தையும் கடந்து அனைத்து தரப்பினரும் படித்துப் பயன்பெறும் வாழ்வியல் நெறிகளை வாழ்வியல் சிந்தனைகளாக எழுதியுள்ளார்கள். எழுதியும் வருகிறார்கள். இது போல பயனுள்ள புத்தகம் வேறு எதுவும் நான் படித்ததாக நினைவு இல்லை. நீங்களும் படித்துப் பயன்பெறுங்கள். நன்றி.
- இரா.போஸ்
நிறுவனர், தமிழ்நாடு கிராம நிர்வாக
அலுவலர் சங்கம், காரைக்குடி
No comments:
Post a Comment