வாசிங்டன், மார்ச் 7- உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் 24ஆம் தேதி அந்த நாட் டின் மீது ரசியா போர் தொடுத்தது. உக்ரைன் மீதான ரசியாவின் உக்கி ரமான தாக்குதல் ஆரம் பத்தில் இருந்தே கடுமை யாக எதிர்த்து வரும் அமெரிக்கா, ரசியாவுக்கு எதிராக உலக நாடுகளை அணி திரட்டி வருகிறது. குறிப்பாக ரசிய ஆக்கிர மிப்புக்கு எதிராக அய்ரோப் பிய நாடுகளின் தலைவர் களை ஒருங்கிணைக்க அமெரிக்கா முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் -ரசியா இடையிலான போருக்கு மத்தியில் அமெரிக்க துணை அதி பர் கமலா ஹாரிஸ் அடுத்த வாரம் போலந்து, ருமே னியா ஆகிய 2 அய்ரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். வருகிற 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அவர் இரு நாடுகளிலும் பய ணம் மேற்கொள்வார் என வும், போலந்து மற்றும் ருமேனியா நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பின்போது ரசியா வின் நியாயமற்ற உக் ரைன் படையெடுப்புக்கு பதிலளிக்க நெருக்கமான ஒருங்கிணைப்பை அவர் முன்னெடுப்பார் எனவும் அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கமலா ஹாரி சின் சந்திப்புகள் உக்ரை னின் அண்டை நாடுகள், ரசிய வன்முறையால் அடைக்கலம் புகும் உக் ரைன் அகதிகளை வர வேற்று அவர்களைக் கவ னித்துக் கொள்ளும் போது, அமெரிக்கா அவர்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது குறித் தும் கவனம் செலுத்தும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment