மலர்ந்ததா தாமரை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

மலர்ந்ததா தாமரை?

நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர் தலிலும் வெற்றி என வரலாற்று சாதனை படைத்துள்ளார் சமூக நீதிக்கானசரித்திர நாயகர் தளபதி அவர்கள். வெற்றிச் செய்தியை கொண்டாடும் போது இது திராவிட மாடல் ஆட்சி என்று எதிரிகளுக்கு எச்சரித்தார். இது பெரியார் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி என தளபதி அவர்கள் முரசொலித்து வருவது கண்டு இன எதிரிகள் கதிகலங்கிபோய்உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் பா... தோல் வியை தழுவிக்கொண்டதை ஏற்றுக் கொள் ளாமல், தாமரை மலர்ந்து விட்டது என பாஜக நையாண்டி செய்கிறது.

காந்தியை கொன்று ஆர். எஸ் எஸ் தமது கம்பெனி (இனவெறி) இருப்பிடத்தை  காட் டியது. பாபர் மசூதியை இடித்து (மதவெறி) பா... என்ற நச்சுபாம்பு வெளி வந்தது. விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் (ஆதிக்க வெறி) கலவரத்தை உருவாக்கி இந்து முன்னணி வெளிக்காட்டிக் கொண் டது. இப்படி நாட்டிற்கும், மக்களுக்கும் தீமை தரக்கூடிய வகையில் முளைத்தவை தான் ஆர்.எஸ்.எஸ், பா..., இந்து முன்னணி வகையறாக்கள். இவைகளுக்கு என்று நல்ல விதமான கொள்கை கோட் பாடுகள் கிடையாது. தான், தமது, தனது என்ற ஆணவக் கோட்பாடு மதம், ஜாதி, இன வெறியோடு இணைந்தது தான் இந்தக் கட்சிகளின் தொழில்.

ஒற்றுமையாக வாழும் சமத்துவ தமிழ் நாட் டில் பாஜக காலடி எடுத்து வைக்க தவியாகத் தவிக்கிறது.

ஆணவம் பிடித்த பாஜகவை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. மகிழ்ச்சி யில் பாஜக திளைக்க வேண்டாம் - மண்ணை கவ்வும் நிலைதான் ஏற்படும்.

மொழியால் உணர்வு பெற்று இனத்தால் எழுச்சிபெற்ற திராவிட இயக்கம் ஆழமாக வேரூன்றி உள்ளது. இதை அசைக்க பாஜக வால் ஒருபோதும் முடியாது. திராவிட இயக்கம் உளப்பூர்வமாக,  உணர்ச்சி யோடு எழுச்சியாக உள்ளது. மதவெறி யோடு அலையும் பாஜகவை, இன உணர்வு கொண்ட திராவிட இயக்கம் எழுச்சியோடு எதிர்கொண்டு விரட்டி அடிக்கும்.

தமிழின் பெருமையை போற்றி, தமிழில் பேசி, திருக்குறளை மேற்கோள்காட்டி என மோடி எத்தனை வித்தைகள் காட்டினாலும் அது தமிழ்நாட்டில் எடுபடாது.

தி.., தி.மு.., .தி.மு..,  என கொள்கை சிங்கங்கள் இங்கே கர்ஜித்து கொண்டே இருக்கும். 

மலர்ந்தது, துளிர்விட்டது என இனியும் பாஜக நகைச்சுவை செய்யவேண்டாம்.

தாமரை மலரவில்லை - பா... என்ற நச்சு வெளிவந்துள்ளது, திராவிடத்தின் பிடியில் இருந்து தப்பவோ, வாலாட்டவோ முடியாது. களையப்படும். திராவிட களப் போராளிகளால் என்பதை  பாஜகவுக்கு காலம் உணர்த்தும் நாள் தொலைவில் இல்லை. பாஜகவின் ஆட்டமும், ஆண வமும் என்றும் பெரியார் மண்ணில் நிலைக்காது.

- மு.சு. அன்புமணி

 மதுரை 625020

No comments:

Post a Comment