தகுதி, திறமையின் யோக்கியதை பாரீர்! பங்குச் சந்தை முறைகேடு வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

தகுதி, திறமையின் யோக்கியதை பாரீர்! பங்குச் சந்தை முறைகேடு வழக்கு

 தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கைதுபுதுடில்லி


மார்ச் 7- தேசிய பங்குச் சந்தை யில் முறைகேடு செய்த வழக்கில் மேனாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை டில்லி யில் சி.பி.அய். காவல்துறையினர் கைது செய்தனர்.

தேசிய பங்குச் சந்தையின் நிர் வாக இயக்குநராக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணா பணி யாற்றியபோது பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப் பிரமணியம் என்பவரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற் றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், மும்பையில் உள்ள, சித்ரா ராமகிருஷ்ணாவின் வீடு உட்பட, அவருக்கு தொடர்பு டைய அலுவலகங்களில், மும்பை வருமான வரி புலனாய்வு இயக்கு நரக அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.  இதேபோல ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

மும்பையில் விசாரணை நடத்த தொடங்கிய சி.பி.அய். காவல்துறையினர், சித்ரா ராமகிருஷ்ணன் இடையேயான பல்வேறு மின்னஞ்சல்களை ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோ சகராகவும், மேனாள் செயலாக்க அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தவர் என கூறப்படும் ஆனந்த் சுப்பிரமணியம் கடந்த 25.2.2022 அன்று சென்னையில் சி.பி.அய். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழலில் சித்ரா ராம கிருஷ்ணா முன்பிணை கோரி சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்று (6.3.2022) சிபிஅய் சிறப்பு நீதிமன் றத்தில் இந்த மனு மீதான விசா ரணை நடைபெற்றது.

மனுவை  விசாரித்த நீதிபதி  சித்ரா ராமகிருஷ்ணாவின் முன் பிணை கோரும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் டில்லியில் நேற் றிரவு (6.3.2022) சித்ரா ராமகிருஷ் ணாவை கைது செய்த சி.பி.அய்., விசாரணை மேற்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment