பெட்ரோல் விலை அரசு ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

பெட்ரோல் விலை அரசு ஆலோசனை

புதுடில்லி, மார்ச் 5- பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக் காமல் இருக்க, கலால் வரியை குறைப்பது குறித்து, ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது.

    இது குறித்து, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதா வது: உலகச் சந்தையில், கச்சா எண் ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.இதைய டுத்து, இழப்பை சமன் செய்ய, எண்ணெய் நிறுவனங்கள் பெட் ரோல், டீசல், சமை யல் எரி வாயு ஆகியவற்றின் விலையை அதிகரிக்கக்கூடும்.அப்படி அதிகரிக்கும்போது, மக்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளா காமல் இருக்கும் வகையில், கலால் வரியை குறைப்பது குறித்து அரசு சிந்தித்து வரு கிறது. ஆனால், இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment