மாஸ்கோ, மார்ச் 5- உக்ரைன் மீது ரசியா போர் தொடுத்துள்ளதால் அந்த நாடு மீது அமெரிக்கா மற்றும் அய் ரோப்பிய நாடுகள் கடும் ஆத்திரத் தில் உள்ளன. இந்த போரை உட னடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி வரும் அந்த நாடுகள், இதை ஏற் காத ரசியா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
அந்தவகையில் ரசியா மீதும் அதன் அதிபர் விளாடிமிர் புதின் மீதும் அடுத்தடுத்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெ ரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடு கள், பன்னாட்டு பரிமாற்றங்களுக் கான ‘ஸ்விப்ட்’ கூட்டமைப்பில் இருந்து ரசிய வங்கிகளையும் நீக்கி உள்ளன.
இவ்வாறு தொடர்ந்து பொரு ளாதார தடைகளையும், தண்ட னை நடவடிக்கைகளையும் மேற் கொண்டு வரும் அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளுக்கு ரசியாவும் பதிலடி கொடுத்து வரு கிறது.
இந்த வரிசையில் மிக முக்கிய மாக, அமெரிக்காவுக்கு ராக்கெட் என்ஜின் ஏற்றுமதியை நிறுத்த ரசியா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ரசியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ் மோஸ் தலைவர் டிமிட்ரி ரோகோ சின் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், ‘இன்று, எனர்கோமாஷ் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி சங்கத்தின் உற் பத்தியை (ராக்கெட் என்ஜின்கள்) அமெரிக்காவுக்கு வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். 1990-களின் நடுப்பகுதியில் இருந்து, இந்த விநியோகம் சுறுசுறுப்பாக இருந்ததை நான் உங்களுக்கு நினை வூட்டுகிறேன். முதலில் இது ஆர்.டி. 180 எந்திரங்கள் ஆகும்’ என்று தெரிவித்தார்.
இதைப்போல அமெரிக்காவுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 24 என்ஜின்களின் பராமரிப்பு பணி களையும் ரசியா நிறுத்துவதாக கூறிய டிமிட்ரி ரோகோசின், ரசியா மீது மேற்கு நாடுகள் விதித் துள்ள பொருளாதாரத் தடைக ளின் அடிப்படையில், ரசியாவின் ராக்கெட் மற்றும் விண்வெளித் திட்டம் சரிசெய்யப்படும் என்றும் கூறினார்.
ரோஸ்கோஸ்மோஸ் மற்றும் ரசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் நலன்களுக்காக இரட்டை பயன் பாட்டு செயற்கைக்கோள்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் டிமிட்ரி ரோகோசின் தெரிவித்தார்.
No comments:
Post a Comment