சிட்னி, மார்ச் 5- ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் கனமழை காரண மாக, சிட்னி மற்றும் அதன் சுற்றுப் புறத்தில் வசிக்கும் அய்ந்து லட்சம் பேரை, பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அரசு எச்சரித் துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத கனமழை கொட்டுகிறது. பல ஆறுகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. நகர சாலைகள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.அடுத்த 24 மணி நேரத்துக்கு மழையின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
லிஸ்மோர் என்ற இடத்தில் வெள்ளம் சூழ்ந்திருந்த ஒரு அடுக் குமாடி குடியிருப்பில் 70 வயது முதியவர் சடலமாக கண்டெடுக்கப் பட்டார். இங்கும் நான்கு பேர் உயி ரிழந்து உள்ளனர்.'குயின்ஸ்லாந்து மாகாணத்தில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை கொட் டும்' என வானிலை ஆய்வு மய்யம் கணித்துள்ளது. ஆஸ்திரேலியா வின் கடலோர நகரங்களை மழை துவம்சம் செய்து வருகிறது.
No comments:
Post a Comment