இந்திய மாணவர்களை வெளியேற்ற ரசியா உதவிக்கரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

இந்திய மாணவர்களை வெளியேற்ற ரசியா உதவிக்கரம்

மாஸ்கோ, மார்ச் 5- உக்ரைன் மீது ரசியா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தி யர்களை மீட்க இந்திய அரசு தீவிர மாக களமிறங்கி உள்ளது. அங் கேரி, ருமேனியா, போலந்து உள் ளிட்ட நாடுகள் இந்த பணிகளுக்கு உதவி வரும் நிலையில், மாணவர் களை மீட்கும் பணியில் ரசியாவின் உதவியையும் இந்திய அரசு நாடியது.

இது தொடர்பாக ரசிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து இந்தியர்களை மீட்கும் பணிகளுக்கு உதவ ரசியா வும் முன்வந்துள்ளது. 

இது குறித்து ரசிய தேசிய பாது காப்பு கட்டுப்பாட்டு மய்ய தலைவ ரான கர்னல் ஜெனரல் மிகெயில் மிசின்ட்சேவ் அரசு தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி நகரங்களில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினரை மீட்பதற்காக மொத்தம் 130 பேருந்துகள் ரசியா வின் பெல்கோராட் பிராந்தியத்தில் தயாராக இருக்கின்றன. இந்த பேருந்துகளில் மீட்டு வரும் மாண வர்கள் மற்றும் வெளிநாட்டினருக் காக பெல்கோராட் பிராந்தியத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் தற்காலிக தங்குமிடங்கள் அமைக் கப்பட்டு உள்ளன. 

அங்கு அவர்களுக்கு சூடான உணவு, மருந்து கையிருப்புடன் கூடிய நடமாடும் கிளினிக் வசதிகள் வழங்கப்படும். பின்னர் அவர்கள் பெல்கோராட் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அவர் களின் தாய்நாடுகளுக்கு ரசியாவின் ராணுவ விமானங்கள் உள்ளிட்ட விமானங்கள் மூலம் அனுப்பி வைக் கப்படுவர்.” இவ்வாறு மிகெயில் மிசின்ட்சேவ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment