கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனின் மைத்துனர் இரா.கோபாலகிருஷ்ணன் மறைவு - கழகத் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனின் மைத்துனர் இரா.கோபாலகிருஷ்ணன் மறைவு - கழகத் தலைவர் இரங்கல்

    கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனின் மைத்துனர் நெய்வேலி இந்திராநகர் இரா.கோபாலகிருஷ்ணன் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நெய்வேலி என்.எல்.சி. பாதுகாப்பு படை துணைஅலுவலரும், திராவிடர் கழக தோழருமான இரா.கோபாலகிருஷ்ணன் (வயது 63) 4.3.2022 மாலை 

3 மணிக்கு மாரடைப்பால் நெய்வேலி இந்திராநகர் கே.எஸ்.கே. நகர் வீட்டில் மறைவுற்றார். இவர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனின் மைத்துனர் ஆவார். இவருக்கு திராவிடமணி என்ற மனைவியும், மகேந்திரராஜா, தமிழ் பொன்னி ஆகிய பிள்ளைகளும் உள்ளனர். திராவிடர் கழக தொண்டராக தோழராக  விளங்கியவர். அண்மையில் சிதம்பரத்தில் நடைபெற்ற தீட்சிதர்களுக்கு எதிரான அறப்போரிலும் கலந்து கொண்டவர் ஆவார். இறுதி ஊர்வலம் இன்று (5.3.2022) மாலை 3 மணிக்கு நடைபெற்றது.  

சென்னை மருத்துவக்  கல்லூரிக்கு இரா.கோபால கிருஷ்ணனின் உடல் கொடையாக வழங்கப்பட்டது. திராவிடர் கழகம் மற்றும் அனைத்து கட்சி தோழர்களும் என்.எல்.சி. ஊழியர்களும், உறவினர்களும், நண்பர்களும் இறுதி மரியாதை செலுத்தினர். தொடர்புக்கு: முனைவர் துரை.சந்திரசேகரன் 9443444882.

குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் தொலைப்பேசியில் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment