தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து

தஞ்சாவூர், மார்ச் 5 தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் 40 உறுப்பினர்களும், அதிமுக வில் 7 உறுப்பினர்களும், அமமுக, பாஜக தலா ஒரு உறுப் பினரும், இரண்டு சுயேட்சைகளும் வெற்றி பெற்றனர்.

51 உறுப்பினர்களைக் கொண்ட தஞ்சை மாநகராட்சிக்கு 04.03.2022 அன்று மாலை மாநகராட்சி அலுவ லகத்தில் நடைபெற்ற மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்கள் 42 வாக்குகள் பெற்று துணை மேயராக தேர்ந் தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தஞ்சை மாநகராட்சி ஆணையர்  சரவணக்குமார் அவர்கள் துணை மேயராக பதவி ஏற்பு செய்து வைத்தார். பழமை வாய்ந்த நகராட்சியாக இருந்து பிறகு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட தஞ்சாவூர் மாநக ராட்சியில் பெண் அதிலும் மருத் துவர்  ஒருவர் துணை மேயராக பொறுப்பேற்றிருப்பது இதுவே முதல் முறை, அந்த வகையில் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்கள் முதல் பெண் மற்றும் மருத்துவர் துணை மேயர் என்கிற சிறப்பினையும் பெற்றுள்ளார்.

துணை மேயர் இருக்கையில் அமரவைப்பு

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திருவை யாறு சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர், தி.மு.க. மாநகர செயலாளர் டி.கே.ஜி. நீலமேகம், புதிதாக தஞ்சை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுக் கொண்ட சண்.இராமநாதன், தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் துணை மேயருக்கான அறையில் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களை, இருக்கையில் அமரவைத்து, பொறுப் பேற்க செய்து சிறப்பித்தனர்..

திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்து

தஞ்சை மாநகராட்சியின் முதல் துணை மேயராக பொறுப்பேற்றி ருக்கும் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் சி.அமர்சிங் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில்  பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், மாநில ப.க. ஊடக பிரிவு செயலாளர்  மா.அழகிரிசாமி, தஞ்சை மண்டல தலைவர்   மு.அய்ய னார், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மாவட்ட செயலாளர்  அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட துணை செயலாளர்  அ.உத்திராபதி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்  நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், பகுத்தறி வாளர் கழகம் ந.காமராஜ், இளை ஞரணி தோழர் ந.தமிழகன் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு தஞ்சை மாநகராட்சி யின் துணை மேயரை வாழ்த்தி சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment