புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பட்டிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பட்டிமன்றம்

 சென்னை, மார்ச் 5   புதுமை இலக்கியத் தென்றலின் சார்பில் 07.03.2022 அன்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில், சென்னை , தந்தை பெரியார் திடலில் அமைந் துள்ள அன்னை  மணியம் மையார் அரங்கில், தமிழ்நாட்டின் தலை சிறந்த முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா பட்டிமன்றம் நடை பெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர்  ஆ.வீரமர்த்தினி தலைமை ஏற்கிறார். பட்டிமன்றத்திற்கு தஞ்சை.கூத்த ரசன் நடுவராக இருந்து பட்டி மன்றத்தை நடத்துகிறார். "தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பெரும் புகழுக்குப் பெரிதும் காரணம் தியாகமா? திறமையா?" எனும் பொருளில் நடைபெறும் பட்டி மன்றத்தில் , "தியாகமே!" எனும் அணியில் கந்திலி கரிகாலன் (அணித் தலைவர்) கவிஞர். செங்கை தாமஸ் ஆகியோரும் 'திறமையே!" எனும் அணியில் மன்னை. இளங்கோவன் (அணித்தலைவர்) அத்திப்பட்டு சாம்ராஜ் ஆகியோரும் வாதாடு வார்கள்.

    நிகழ்ச்சியில், அரிமா. த.கு.திவா கரன், கவிஞர்.முருகையன், புலவர்.சாமிநாகப்பன், கவிஞர் இரா.நன் மாறன், கோ.தீனன், வெ.மருதன், இரா.பரணி, குடியாத்தம் குமணன், ஆட்டோ மணி ஆகியோர் முன் னிலை வகிப்பார்கள். சைதைத் தென்றல் நன்றியுரை நவில்கிறார்.  

No comments:

Post a Comment