சென்னை, மார்ச் 5 வேப்பேரி பெரியார் திடலில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பெரியார் அய்.ஏ.எஸ் அகாடெமியில் 2022 ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளதை தொடர்ந்து , டி.என்.பி.எஸ்.சி, குரூப் , தேர்வுகள் குறித்த சந்தேகங்களை தீர்க்கவும், போட்டித் தேர்வுகளுக்கு எவ்வாறு தங்களை தயார் செய்துகொள்ளவேண்டும் போன்ற மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலான சிறப்பு கருத்தரங்கம் மற்றும் சிறப்பு வகுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (6.03.2022) காலை 10 மணி முதல் 1 மணி வரை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் அய்.ஏ.எஸ் அகாடெமியில் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.இதில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் இருக்கைக்கு முன்பதிவு செய்துகொள்வது அவசியம். தொடர்புக்கு 044-2661 8056 / 99406 38537 மேலும் விவரங்களுக்கு பெரியார் அய்.ஏ.எஸ் அகாடமி, 84/1 ஈ.வி.கே சம்பத் சாலை,பெரியார் திடல்,வேப்பேரி,சென்னை-600 007
No comments:
Post a Comment